“தினசரி வர்ற அந்த 500 ரூபாய வச்சுதான் வீட்டு செலவயும் பார்த்துக்கிட்டு எங்கப்பா எனக்கு பேட்மிண்டன் ரேக்கட்டே வாங்கிக் கொடுத்தாரு.”- துளசிமதி

பாரிஸ் பாராலிம்பிக்கில் பேட்மின்டனில் மட்டும் இந்திய வீராங்கனைகள் 3 பேர் பதக்கம் வென்றனர்.

அதில் ஒருவர் துளசிமதி முருகேசன்.

“எங்க அப்பா தினக்கூலி. தினமும் 500 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு வருவார். அதை வைத்து தான் எனக்கு பேட்மின்டன் ரேக்கெட் வாங்கி கொடுத்தார்” என தனது வறுமையின் பின்னணி பற்றி விளக்க தொடங்கினார் துளசிமதி முருகேசன்.

“அப்பா ஏற்கனவே ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் பிளேயர். ஆனா அவரால அதுல ஜெயிக்க முடியல. எப்படியாவது என்னை ஸ்போட்ஸ்ல ஜெயிக்க வைக்கணும்னு முயற்சி பண்ணார்.

முதலில் ரன்னிங் , அப்புறம் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கால்பந்து என ஒவ்வொரு விளையாட்டா ட்ரை பண்ணி பேட்மின்டன் ல தடம் பதித்தேன்.
முதல்ல கஷ்டமா இருந்தது அப்புறம் ஒவ்வொரு போட்டியா ஜெயிச்சு அதுல வர பரிசு தொகையை வச்சு ஷூ வாங்கினேன்.

எல்லாரும் பிரைவேட் ஸ்டேடியத்தில் பயிற்சி எடுத்தாங்க. ஆனா நான் கவர்மெண்ட் ஸ்டேடியத்தில் தான் பயிற்சி எடுத்தேன்.

சொந்தக்காரங்க எல்லாரும் நான் விளையாட கூடாதுன்னு தான் சொன்னாங்க. விளையாட்டு விட்டுட்டு படிக்கிற வேலைய பாருன்னு அட்வைஸ் பண்ணாங்க. அதை நினைக்கும் போது அழுகையே வரும். ஒருவேளை நாம ஸ்போர்ட்ஸ்க்கு தகுதியான ஆள் இல்லையோ அப்படின்னு நினைக்க தோணும். ஆனால் அது எல்லாத்தையும் மீறி எங்க அப்பா எனக்கு கொடுத்த தன்னம்பிக்கைல ஜெயிச்சு வந்திருக்கேன்.

13 வருஷமா எனக்கு எங்க அப்பா தான் பயிற்சி கொடுத்தார். அதுக்கப்புறம் தான் நான் தனியார் பயிற்சியாளர தேர்ந்தெடுத்தேன்.

வெட்னரி மெடிசன் படிக்கிறதுனால எனக்கு அதிகமா லீவ் கிடைக்காது. பாரலிம்பிக்கில் கலந்துக்க 15 நாடுகளுக்கு போய் பல கட்ட போட்டிகள்ல விளையாட வேண்டி வரும்.

காலேஜ் ல பாராலிம்பிக்ஸ் ல விளையாட ஒரு மாசம் லீவு கேட்டேன் கொடுக்கவில்லை. இதனால விளையாட்டா? படிப்பா? ஏதாவது ஒன்ன தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வந்துச்சு.

உதயநிதி சார் தொடர்பு கொண்டேன். அவர் கொடுத்த ஒரு லெட்டர் தான் என்ன லீவோட விளையாட்டுக்கு வந்து ஜெயிக்க வைத்தது.

சின்ன வயசுல விளையாட்டுப் போட்டிகளில நம்ம தேசியக்கொடி பறக்கும்போது பெருமிதமாக இருக்கும். இப்போ என்னாலையும் அந்த தேசிய கொடி பறக்குதுன்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

என்றார் துளசிமதி.

விளையாட்டுக்கு திறமையை தவிர குடும்ப சூழலோ, வறுமையோ, களமோ எதுவுமே தடை இல்லை என நிரூபித்துக் காட்டிவிட்டார் துளசிமதி முருகேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

Facebook
Instagram
YOUTUBE