ஆயுத பூஜை வரப்போகிறது. அதற்கு படையல் போட பொறி வாங்கினீர்கள். ஆனால் அது எப்படியும் மிஞ்சும். பொதுவாக கம்பெனிகளில் அங்கு பணிபுரிவோருக்கு கொடுக்கப்படும் பொரி மீதம் போ ஏராளமான பொறி மிஞ்சிவிடும். அடுத்த நாள் நமார்ந்து போய் குப்பையில் போடுவதற்கு பதில் அந்த பொறியை தோசைக்கு மாவு அரைக்கும் போது சேர்த்து பயன்படுத்தினால் மிகவும் வித்தியாசமான சுவையோடு இருக்கும்.

தென்னிந்தியாவின் பிரதான உணவான தோசையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பொறியைப் பயன்படுத்தி எப்படி தோசை செய்வது என்பதை பார்க்கலாம். பச்சரிசியையும் பொரியையும் சேர்த்து இந்த பொறி தோசை செய்யப்படுகிறது. இது மற்ற தோசையை விட மிக மிருதுவாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 கப்

பொரி 4 கப்

உளுந்து கால் கப்

வெந்தயம் அரை ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்த பொறியை போதிய அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

இதை அடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும்.

4 மணி நேரம் இவை அனைத்தும் ஊறவேண்டும்.

இதை அடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் முதலில் பச்சரிசியை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாவு பதத்திற்கு வந்தால் சரி. இதை அடுத்து பொறியில் இருக்கும் தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்துவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

அதையும் மிக்ஸி ஜாரில் தனியாக சேர்க்க வேண்டும்.

இதன் பின்பாக ஊறவைத்த உளுந்தையும் வெந்தயத்தை சேர்த்து மிக்ஸி ஜாரில் அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாவு பதத்தில் வந்தால் போதுமானது. அதிகம் தண்ணீராகவோ அதிகம் கெட்டியாகவோ இருக்கக் கூடாது.

இந்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து இரவு முழுக்க புளிக்க வைக்க வேண்டும்.

சாதாரணமாக வீட்டில் மாவு அரைக்கும் போது என்ன விதிமுறையோ அதேதான் இதற்கும்.

மாவு நன்றாக புளித்தவுடன் தோசை வார்ப்பதற்கு இது தயாராகிவிடும்.

தவாவை நன்றாக சூடு செய்து மாவை அதில் ஊற்றி தோசை கல்லில் பரப்பி விட வேண்டும்.

இதன்பின் முருகலாக வேண்டும் என்றால் அதிக எண்ணெய் சேர்த்து திருப்பி போட்டு வேக வைக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டால் தோசை கல்லை மூடி வைத்தும் கூட தோசை சுட்டால் மிகவும் மிருதுவாக தோசை வரும்.

ஆனால் மிதமான சூட்டில் தான் அடுப்பு எரிய வேண்டும். இருபுறமும் வெந்தவின் தோசையை எடுத்து சூடான தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியோடு சேர்த்து பரிமாறலாம்.

பொறியில் செய்த இந்த தோசை மிகவும் வித்தியாசமான சுவை கொண்டது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE