பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரான ஹரிஷ் கல்யாண் உள்ளே வந்துள்ளார். அவர் ஷாப்பிங் செய்ய அர்ச்சனாவையும், பூர்ணிமாவையும் தேர்வு செய்ய, அவர்கள் இருவருமே அத்யாவசியமான அரிசியை மறந்து வைத்துவிட்டனர். இதனால் வீடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதை மையப்படுத்தி அர்ச்சனாவை ரவுண்டு கட்டி பேசித் தள்ளினார் விஷ்ணு. ஆனால், பூர்ணிமாவும்தான் ஷாப்பிங் சென்றார் என்பதை வசதியாக மறந்துவிட்டார் போல்.

எனக்காக பிக்பாஸ் வீட்டினருக்கு அரிசி கொடுக்குமாறு ஹரீஷ் கல்யாண் கெஞ்சிக் கேட்டும் பிக்பாஸ் விருந்தினர் என்றும் பாராது, மவுனத்தினாலே பதிலடி கொடுத்தார்.

மளிகைப் பொருட்கள் வந்தும், அதிர் அரிசி இல்லை. பிக் பாஸ்ஸா கொக்கா!..

“அர்ச்சனாவை விஷ்ணு நோண்டிட்டே இருக்கற மாதிரி தெரியுது” என்று தினேஷிடம் சொன்னார் ரவீனா. “வீக்கா இருக்கிறவங்களைத்தான் அவன் டார்கெட் பண்ணுவான். நல்லா செஞ்சி விட்டா கிட்டயே வரமாட்டான்” என்று கூறினார் தினேஷ்.

“Live simply, walk humbly, love genuinely” என்கிற பிரபல மேற்கோளை காட்டி ஹரீஷ் கூறினார்.

ஷாப்பிங்கில் அரிசியை மறந்து வந்தது பெரும் குற்றவுணர்வை பூர்ணிமாவுக்கு ஏற்படுத்தியது. பாய்ஸ் படத்தில் வரும் ‘ப்ளீஸ் சார்..’ பாடலை கேமரா முன்பு கோரஸாகப் பாடி பிக் பாஸிடம் அரிசி கேட்டும பலன் இல்லை.

அடுத்ததாக பார்க்கிங் பட புரமோஷனுக்காக உள்ளே வந்த நடிகை இந்துஜாவால், மிகவும் கவலைக்கு ஆளானார் பூர்ணிமா. ஏனெனில் இருவரும் உற்ற தோழிகள். நெருங்கிய நட்பாக இருந்தும், அவர் பூர்ணிமா பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்துகொள்ளும் முறையை நடிகை இந்துஜா விரும்பவில்லை போலும். உள்ளே வந்ததும் அனைவரையும் பார்த்து சிரித்து பழகியும், பூர்ணிமாவைக் கண்டுகொள்ளவில்லை.

‘எனக்கு எதிராக உலகமே சதி செய்கிறது’ என மீண்டும் புலம்பித் தீர்த்தார் பூர்ணிமா. மிகவும் தெரிந்தவர்கள் போல் யாரையும் காட்டிக் கொள்ள வேண்டாம் என பிக்பாஸ் டீம் கேட்டுக் கொண்டதாக இந்துஜா கூறியும், அதனை ஏற்க மறுத்தார் பூர்ணிமா.

இன்னொரு ரகசியம் தெரியுமா? பூர்ணிமாவை இந்துஜா இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டார். இந்த விஷயம் பூர்ணிமாவுக்கு தெரியாது.

‘கூல் சுரேஷ் ரொம்ப கிளவரா இந்த ஆட்டத்தை ஆடறாரு. வீட்டுக்குப் போறேன்னு அடிக்கடி அனத்தறாரு. ஆனா நாமினேட் பண்ணா டென்ஷன் ஆயிடறாரு’ என்று தினேஷிடம் கூறினார் மணி.

“காய்கறில்லாம் வெட்டச் சொல்லுங்கம்மா. சமையலுக்கு ரொம்ப டைம் ஆகுது” என்று விசித்ரா சொன்னார். அடுப்பைப் பற்ற வைத்ததும் தான் மெனு எழுதாமல் பிக்பாஸ் வீடு அனுமதி தராமல் அடுப்பு பற்ற வைக்கக் கூடாது என்ற விதியை மீறிவிட்டதை உணர்ந்து அதை விஷ்ணுவிடமும் உளறினார் பூர்ணிமா. இதை வைத்து கம்ப்ளெய்ன்ட் மணி அடித்து நிக்சனின் ஆட்டத்தைக் கலைக்க முயன்றார் விஷ்ணு. இறுதியில் அது பூர்ணிமாவுக்கே ஆப்படித்தது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE