காணும் பொங்கலைக் கொண்டாட பாரம்பரிய விளையாட்டு பாகம் – 1
பொங்கல் விடுமுறை விட்டாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு குஷி தான். அக்கம்பக்கத்தினர், அல்லது உறவினர்களின் பிள்ளைகளோடு சேர்ந்து ஆளுக்கு ஒரு புறம் ஒரு விளையாட்டை பசி, தூக்கம், தாகத்துக்கு மட்டும் வெயிட்டீஸ் என சொல்லிவிட்டு விளையாட்டுக்கு ஒரு பாஸ் பட்டனை அமுத்திவிட்டு வருவார்கள்.
அந்த பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்றைய ரீல்ஸ், ஷார்ட்ஸ் மட்டுமே பார்த்து, கேமில் பொழுதைப் போக்கும் சிறார்களுக்கு தெரியவில்லை. இந்த விளையாட்டை விளையாடுங்கள் என சொல்லித்தர 90ஸ் கிட்ஸ்களுக்கு நேரம் கூட இல்லை. அதுமட்டுமின்றி பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றின் பெயரை அவர்களே கூட மறந்து போயிருப்பார்கள். சிலருக்கு பெயர் ஞாபகம் இருந்தாலும், நிபந்தனைகள் மறந்து போயிருக்கும்.
அவர்களுக்கு அதை நினைவூட்டும் வகையில், த காரிகை உங்களுக்கு சிலவற்றை நிபந்தனைகளோடு நினைவூட்டுகிறது.
ஜோடிப் புறா
எத்தனை பேர் வேண்டும் – 9 அல்லது அதற்கும் மேற்பட்ட ஒற்றைப் படை நபர்கள்
விளையாடும் முறை
ஒரு மைதானத்தில் பெரிய வட்டம் அல்லது சதுரம் போட வேண்டும்.
ஒவ்வொருவரும் மற்றொருவருடன் ஜோடியாகக் கைகோர்த்து நிற்க வேண்டும்.
உதாரணத்துக்கு 9 பேர் என்றால் 2, 2 பேராக ஜோடியாக கைகோர்த்து 4 குழுக்களாக வேண்டும்.
மீதமிருக்கும் ஒருவர் பிறரைத் துரத்த வேண்டும்.
ஜோடியில்லாத தனிப்புறாவாக ஒருவர் சிக்கினால் அவர் அவுட்.
யாரைத் துரத்த ஓடுகிறாரோ, அவரைப் பிறர் தனது ஜோடியை விட்டுப் பிரிந்து வந்து காப்பாற்றுவார்.
அவரால் தனித்துவிடப்பட்ட நபரை துரத்தும்போது, மற்றொருவர் தனது ஜோடியை விட்டு வந்து கைகோர்த்து அவுட் ஆவதில் இருந்து காப்பாற்றுவார்.
நிபந்தனைகள்
வரையப்பட்ட வட்டம் அல்லது சதுத்தைத் தாண்டி வந்தால் அவுட்
‘
அவுட் ஆனவர் பிறரைத் துரத்த வேண்டும்
ஜோடியில்லாத தனி நபரைத் தொட்டால் அவர் அவுட் ஆகி விடுவார்
விளையாட்டின் பலன்
கூட்டுமுயற்சி மேம்படும்
சிறிய பிரச்னை துரத்தினால் பிடிபடாமல் தப்புவது கற்பார்கள்
ஆபத்தில் இருப்பவரைக் காப்பாற்ற ஓடும் திறன் அதிகரிக்கும்
சுற்றி சுற்றி சிரித்தபடியே ஓடி வருவதால் உடலும், மனதும் வலுப்பட்டு புத்துணர்வு பெறும்.
பாகம் 2-ல் பல்லாங்குழி விளையாட்டையும், அதன் நிபந்தனை மற்றும் பலன்களையும் காணலாம். அதுவரை பின்வரும் எங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.