வெளிநாட்டவருக்குப் பிடித்த இந்திய உணவுகளில் டாப் 10 உணவுகளில் பிரியாணி இல்லை என பல செய்திகளில் பார்த்திருப்போம். சோத்துல சாம்பாரா? எனப் பொங்கி எழுந்த சூரி போல, என்னது? தல பிரியாணிக்கே இடமில்லையா? எனப் பொங்கி எழுந்தது “த காரிகை குழு”. தேடித் தேடி அதே ஆய்வு முடிவை வெளியிட்ட டேஸ்ட்அட்லசின் ஆகஸ்ட் 16-ம் தேதியிட்ட கட்டுரையில் கண்டு பிடித்தது. 50 உணவுகளையும் அலசி ஆராய்ந்ததில் 4-வது இடத்தில் நமது ஆஸ்தான நாயகனாக பிரியாணி இடம் பெற்றது. இதைக் கண்ட பின் நமது வாசகர்களுக்கு சொல்லாவிட்டால் எப்படி? ,0என தயாரிக்கப்பட்ட கட்டுரைதான் இது. இதன் முதல் பாகத்துக்கான லிங்க் இங்கே கொடுக்கப்பட்டது. 2-வது பாகத்தை இதே கட்டுரையில் தொடர்ச்சியாகப் படிக்கலாம்.

5. தந்தூரி

தந்தூரி வகையான உணவு உருளை வடிவ களிமண் அடுப்பில் செய்யப்படுகிறது. விறகைக் கொண்டோ, நிலக்கரியை கொண்டோ எரியூட்டப்பட்டு இது சமைக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பிரட் தயாரிக்கும் அதே முறையில் தந்தூரி சமைக்கப்படுகிறது. கோழி இறைச்சி மசாலாவில் ஊற வைத்து அதன் பின் அதனை சமைத்து புகையிலேயே வேக வைத்து பரிமாறுகின்றனர்.

4. பிரியாணி

முகலாயர் கால உணவு. இது பிரியண் என்ற பெர்சிய வார்த்தையில் உருவானது. அதற்கு வறுத்தது என்ற அர்த்தமாகும். ஷாஜகான்-மும்தாஜ் ஆகியோரது விருப்பமான ராஜ உணவாக பிரியாணி கருதப்படுகிறது. பெரும்பாலும் வட இந்திய மாநிலங்களில் பாஸ்மதி ரைசும், தென்னிந்திய மாநிலங்களில் சீரகசம்பா, குருணை போன்ற பிரத்யேக அரிசிகளிலும் பிரியாணி செய்யப்படுகிறது. என்னதான் சைவக் காய்கறிகளைப் போட்டு சமைத்தாலும், சிக்கன், மட்டன், பீஃப் போன்றவற்றைக் கொண்டு செய்யும்போது அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது.

3. பட்டர் சிக்கன்

இதனை பட்டர் சிக்கன் என்றும் முர்க் மகானி என்றும் அழைக்கின்றனர். டெல்லியில் உள்ள மோதி மஹால் என்ற உணவகத்தில் இது முதன்முறையாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மிஞ்சிப்போன தக்காளி வெண்ணை ஆகியவற்றை ஊறவைத்து, மசாலா தயாரித்து தந்தூரியில் சமைத்த சிக்கனை எடுத்து, இந்த இனிப்பும் புளிப்பும் காரமும் கலந்த பட்டர் சிக்கன் தயாரித்தனர். எதேர்சைசையாக அது சுவை அதிகம் மிக்கதாக இருந்ததால், சர்வதேச அளவுகளிலும் இந்த உணவு விரும்பி சாப்பிடப்படுகிறது.

2. நான்

நன்கு மென்று சுவைக்கக்கூடிய நான் ஒரு ரொட்டி வகையைச் சேர்ந்தது. இது இந்தியன் பிளாட் பேட் பிரட் என கூறப்படுகிறது. 1300 ஆம் ஆண்டுகளில் இருந்து இது இந்தோ பெர்ஷிய உணவு வகைகளில் முக்கியத்துவமாக இருந்ததாக கவிஞர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். வெண்ணிற மாவு, ஈஸ்ட், முட்டை, பால், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை கொண்டு நான் தயாரிக்கப்படுகிறது, இது ஒரு சமூகத்தினர் மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது உலக அளவில் புகழ்பெற்ற உணவாகப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  1. பட்டர் கார்லிக் நான்

நானின் மற்றொரு வகையாக இது பார்க்கப்படுகிறது. வெண்ணையும் பூண்டும் சேர்த்து அதிக சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. இது கிளாசிக் ரெசிபி ஆகும். பொன் நிறத்தில் வரும் போது இதை பார்க்கவே சுவைக்க தோன்றும் அளவு இருக்கும். இதுதான் இந்தியாவில் உள்ள உணவுகளிலேயே அதிகம் சுவைக்க தூண்டும் வெளிநாட்டவர்களுக்கு பிடித்த உணவு என்று பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இதன் மீது வெண்ணையோ, நெய்யோ பூசி பரிமாறுகின்றனர். பட்டர் சிக்கன் அல்லது பிற வகையான உணவு பொருட்களுடன் இது விரும்பி சுவைக்கப்படுகிறது.

பிற இந்திய உணவுகள்

த காரிகையின் எக்ஸ்க்ளூசிவ்

50-வது இடத்தில் புளியோதரை உள்ளது. 42 வது இடத்தில் சிக்கன் 65 உள்ளது. குலாப் ஜாமூன், பக்கோரா, ரசமலாய் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. சாம்பார் 34-வது இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் பானிபூரியும் உள்ளது. 31-ல் ஆப்பம், 30-ல் உப்மா, 28-ல் ஐதராபாதி பிரியாணி, 26-ல் கிச்சடி உள்ளன. 24-ல் பாயாசம், 21-ல் இட்லி, 20-ல் சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் உள்ளன.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE