டேஸ்ட் அட்லஸ் என்ற உணவு தொடர்பான இதழ் ஒன்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அதன்படி, இந்திய உணவுகளைப் பற்றிய ஆய்வு செய்தது. இந்தியாவில் இத்தனை வகை மசாலாக்களா? அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மணமும், சுவையும், மருத்துவ குணமும் உள்ளனவா? என இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.

அவற்றில் 100 சுவையான இந்திய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளனர். இந்திய உணவகங்களுக்குச் சென்றால் ஏதேனும் ஒரு மேஜையில் ஏதேனும் ஒரு தட்டில் டாப் 10 உணவுவகைகளில் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படி அந்த டாப் 10 உணவுப் பட்டியலில் என்னென்ன உள்ளது எனப் பார்க்கலாம். சமீபத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணிதான் முதல் இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டது. ஆனால் வெளிநாட்டவர்களின் விருப்பப் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது பிரியாணி. வெளிநாட்டவர்கள் அதிக காரம் மிக்க உணவை விரும்ப மாட்டார்கள். புளிப்பு, இனிப்பு, சற்று காரம் ஆகிய சுவையுள்ள உணவாக இருந்தால் அவர்கள் விரும்பி உண்பார்கள். அதையே அவர்கள் பட்டியலாகவும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  1. தோசை

அரிசி, உளுந்தை ஓரிரவு ஊற வைத்து மறுநாள் காலை அதை அரைத்து, பேன் கேக் போல தட்டையான பேனில் ஊற்றி பரப்பிவிட்டு இந்த தோசை செய்யப்படுவதாக வெளிநாட்டு உணவு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. அதில் குறைந்த அளவு எண்ணெயை ஊற்றி பொன்நிறமாகும் வரை மொறுகவிட்டு எடுத்த தோசை மீது, பட்டர் போட்டு பரிமாறப்படுகிறது. அதனுடன் சட்னியும் உருளைக்கிழங்கு மசாலாவும் வழங்குகின்றனர். இது தென்னிந்திய உணவுகளில் மிகவும் சுவையான உணவு எனக் கூறியுள்ளனர்.

  1. கிரேவி

ஆடு, மாடு, பன்றி, கோழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இறைச்சியைக் கொண்டு கறியாக சமைப்பது கிரேவி அல்லது விண்டலூ எனப்படுகிறது. பனீரைக் கொண்டும் இதனைச் செய்யலாம். குறிப்பாக கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் 15-வது நூற்றாண்டில் இருந்து சமைக்கப்படுகிறது.

8. சமோசா

எண்ணெயில் நன்கும் ஒருமொருவென வருத்தப்பட்ட முக்கோண வடிவிலான பேட்டை உணவு சமோசா என்று குறிப்பிட்டுள்ளனர். இது ஸ்னாக்ஸ் ஆக மட்டும் இன்றி இந்திய உணவுகளில் ஒரு என்ட்ரி ரக உணவாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். ஸ்பைசியான உருளைக்கிழங்கு, வெங்காயம், பட்டாணி உள்ளிட்டவற்றை சேர்த்து செய்யப்படும். இந்த உணவு மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தது என்று கூறியுள்ளனர். இத்துடன் சட்னியும் வறுக்கப்பட்ட மிளகாயும் சேர்த்து கொடுக்கும்போது ருசி பிரமாதமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

7. குருமா

சுவையான அசைவ உணவு கஞ்சியாக இதனை குறிப்பிடுகின்றனர். இதில் வெஜிடேரியன் வகையும் உண்டு என்று கூறியுள்ளனர். குங்குமப்பூ, தயிர் அதனுடன் பல்வேறு வகையான மசாலா பொருட்கள், கொத்தமல்லி, சேர்க்கின்றனர். அது மட்டும் இன்றி சீரகம் மிளகாய், மஞ்சள் தூள் ஆகியவற்றின் கலவையாக அக்பர் காலத்து ராஜ உணவுகளில் ஒன்றாக இந்த குருமா இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இது பெர்சிய – இந்திய கலாச்சார உணவின் கலவை என்றும் கூறியுள்ளனர்.

6. தாலி

இந்தியாவில் தாலி உணவு என்றால் பல்வேறு வகையான உணவுகளின் கலவை என்று கூறப்படுகிறது. அரிசி, பருப்பு, பயறு, காய்கறிகள், சட்னி, ஊறுகாய், அப்பளம், இனிப்பு என பல்வேறு வகையான அசைவ உணவுகள் அந்தந்த பகுதிக்கு ஏற்றார்போல் வைக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறியுள்ளனர். ஒரு கலவையான உணவாக இந்த தாலி இருக்கும். இதில் வெஜிடேரியன் மற்றும் நான் வெஜிடேரியன் ஆகிய 2 வகைகளிலும் இந்த உணவு கிடைக்கிறது.

மீதமுள்ள 5 வகை உணவுகள் என்ன என்பதை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE