பாலாடை கட்டி எனப்படும் பன்னீர் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு பண்டமாகும். ஆனால் பலரும் இதை உடல் எடை கூடும் என நினைத்து வருகின்றனர்.

உடல் எடை கூடும் விவகாரத்தில் பொதுவாக கெட்ட கொழுப்புள்ள உணவுகளே அதிகம் உங்களை ஆட்கொள்கின்றன. உடலை பெருக்க வைக்கின்றன. ஆனால் பாலில் செய்த நல்ல உணவு தேங்காய் உள்ளிட்டவை நல்ல கொழுப்பு வகைகளை கொண்ட உணவுகள் ஆகும்.

இதனை பலரும் தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர். பனீர் சாப்பிட்டால் எடை கூடும் என நினைத்துக் கொண்டு அதனை உணவில் இருந்து தவிர்க்கின்றனர். ஆனால் பனீர் சாப்பிட்டால் உடல் எடை குறையத்தான் செய்யும்.

பனீர் சாப்பிட்டவுடன் நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டதாக உணர்வீர்கள். இது உங்களை மேலும் உணவை உட்கொள்ள வைக்காமல் தடுக்க உதவும். ஏனெனில் இதில் புரோட்டின் அதிகம் இருக்கும்.

இது மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். ஆனால் இதை அதிக அளவு எண்ணெயில் பொரித்து பயன்படுத்த வேண்டாம் என்பதே சீரான டயட்டுக்கு உரிய அட்வைஸ் ஆகும்.

தற்போது எந்தெந்த வகைகளில் பனீரை உட்கொள்ளலாம் என பார்க்கலாம். பனீர் சாலட் செய்ய கியூப் சைஸில் வெட்டிக்கொண்டு வெள்ளரிக்காய் தக்காளி உள்ளிடவற்றுடன் சிறிதளவு கீரையும் சேர்த்து உப்பு பெப்பர் போட்டு அப்படியே சேலட் ஆக சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

நல்ல வண்ணமிக்க குடைமிளகாய்களுடன் சேர்த்து வணக்கி அத்துடன் பிரக்கோலி, காய்கறிகள் உள்ளிட்டவற்றை போட்டு சற்று எண்ணெய் ஊற்றி மசாலா பொடிகளை தூவி விட்டு உப்பு போட்டு இறக்கி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் சற்று புளிப்பு சுவைக்கு லெமன் பிழிந்து கொள்ளலாம்.

பனீர் டிக்காவில் மசாலா பொருட்கள் அளவு அதிகம் இருக்கும். பனீரை துண்டு துண்டாக வெட்டி அதில் குடைமிளகாய் வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றை சேர்த்து கிரில் செய்தோ பேக் செய்தோ சாப்பிடலாம்.

இதில் எண்ணெய் சுத்தமும் பயன்படுத்த வேண்டாம். பனீர் கீரை பனீரை நன்கு சமைத்து கீரை ஓடு சேர்த்து தக்காளி தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்பதால் எடை குறைப்பு பயணத்தில் இது உங்களுக்கு மிகவும் உதவும்.

கோதுமையால் செய்த சப்பாத்தி போன்ற டோர்டில்லாவில் குடைமிளகாய் பனீர் ஆகியவற்றை போட்டு வணக்கி சற்று தயிர் போன்ற சாஸை ஊற்றி பிரட்டி விட்டு சப்பாத்திக்குள் வைத்து ரோல் செய்து சாப்பிட அருமையாக இருக்கும். மீல்ஸ்களுக்கு இடைப்பட்ட ஸ்னேக் ஆப்சனுக்கு ஏற்ற உணவாகும்.

பன்னீர் கீரை சாண்ட்விச் செய்யலாம். கீரையில் சாண்ட்விச் செய்து சாப்பிடும் போது அதனை பன்னீர் வெட்டிப்போட்டு வணக்கி சாப்பிட அருமையாக இருக்கும். ரொட்டி மைதாவில் செய்ததாக இல்லாமல் முழு கிரெயின் ரொட்டியாக இருந்தால் அருமையாக இருக்கும்.

வெஜிடபிள் சூப் செய்யும் போது அதில் சிறிது துண்டு பனீரை வெட்டி போட்டு செய்து சாப்பிட மிகவும் அருமையாகவும் இருக்கும் அதிக நேரத்துக்கு பசியில் இருந்து தாக்குப் பிடிக்க உதவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE