அதே மூர்த்தி. தனத்துக்கு பதில் நிரோஷா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரமோ

சற்றுமுன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் 2-ம் பாகம் பற்றிய ப்ரமோ வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் 4 அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பம் பாசத்தோடு ஒரே தொழில், ஒற்றுமையாக அறிமுகப்படுத்தப்பட்டனர். மூர்த்தி-தனம், கதிர்-முல்லை, ஜீவா- மீனா, கண்ணன்-ஐஸ்வர்யா ஜோடிகள் 4 ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸில் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்தனர்.

அந்த நாடகம் முடிந்துவிட்டது. கிளைமாக்ஸ் ஐ நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்துவிட்டது என்றும் டிஆர்பி யில் முதல் 3 இடங்களை பிடித்ததோடு விஜய் டிவியில் 5 ஆண்டுகளாக ஒளிபரப்பான ஒரே ஒரே நாடகம் என்ற பெருமையும் பெற்றது. இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அவர்களது இயற்பெயர்களையும் மக்கள் மறக்கும் அளவுக்கு சிறப்பாக நடித்து விட்டனர்.

சுபம் போட்டு முடிக்கும் வேலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகத்தில் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரமோ

அதே பழைய பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் சுப்ரபாதம் பின்னொலியில் ஒலிக்க தனம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் நிரோஷா. இவர் ஏற்கனவே சின்ன பாப்பா பெரிய பாப்பா நாடகத்தில் நடித்து தனது காமெடி திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

3 இளைஞர்கள் ஒரு அறையில் பாய்விரித்து அருகேருகில் படுத்து தூங்க, தீபாவளி அதுவுமா இவ்ளோ நேரம் தூங்குறீங்க? எந்திரிங்கடா என எழுப்புகிறார். இன்னும் கொஞ்ச நேரமா, என இழுத்து போர்த்தி உறங்குபவர்களுக்கு ஒரு அலாரம் ஒலியாக “உங்க அப்பா வந்துட்டாரு டா” என ஒரே வார்த்தையை கூற, அனைவரும் படபடவென்று எழுந்து செல்கின்றனர்.

தோற்றத்தில் முதிர்ச்சி, காதோரம் நரைத்த முடியோடு பேப்பர் படித்துக் கொண்டே மூர்த்தி “என்னம்மா நம்ம பசங்க எந்திரிச்சிட்டாங்களா? என நிரோஷாவிடம் கேட்க, அவரும் “நம்ம புள்ளைங்க தான? சூப்பரா எந்திரிச்சிட்டாங்க” என சொல்கிறார். மூன்று பிள்ளைகளும் டான் என அங்கு வந்து நிற்கிறார்கள். புள்ளைன்னு வளர்த்தா நான் வளக்குற மாதிரி வளக்கனும் அப்படின்னு சொல்லி மிகவும் பெருமிதத்தோடு கூறி புன்னகைக்கிறார் மூர்த்தி.

கமென்ட்ஸ்

இந்த சீசனிலும் தனமாக சுஜியே தொடர்ந்திருக்கலாம் என சில அங்கலாய்த்துக் கொள்கின்றனர். மீண்டும் பழைய வீடா? சூப்பர் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் ஒன்னே முடியல, அதுக்குள்ள ரெண்டாவதா? கொஞ்சம் கேப் விட்டு அடிங்க பா என சிலர் கலாய்த்து வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE