உங்க குழந்தைக்கு கணக்கு வரலையா, பல்லாங்குழி விளையாடுங்க.
மொபைல், டிவி, லேப்டாப், கேட்ஜட் என ஸ்கிரீன் பார்த்து பார்த்து உங்க குழந்தைகளோட கண்ணு கெட்டு போயிடுச்சா?
அடிக்கடி தலை வலிக்குதுன்னு சொல்றாங்களா? கண்ணாடி போடணும்னு சூழல் வருதா?
இதுக்கெல்லாம் காரணம் நம்ம பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து கேட்ஜெட் அடிமையாக குழந்தைகளை வச்சிருக்கிறதுதான்.
எங்க வீட்ல ஒரே குழந்தை தான் இருக்காங்க, விளையாட ஆள் இல்ல. அதனால தான் அவங்க போன் பாக்குறாங்க அப்படின்னு சொல்ற பழக்கத்தை விடுங்க.
நீங்க உங்க குழந்தையோட தினமும் 20 நிமிஷம் விளையாட டைம் ஸ்பென்ட் பண்ணீங்கன்னா அவங்க ஸ்கிரீன்ல இருந்து விலகி ஆரோக்கியமா இருப்பார்கள்.
அது மட்டும் இல்லாமல் இந்த வருட பொங்கல் விடுமுறைக்கு நீங்க ஊருக்கு போற மாதிரி இருந்தா உங்களுடைய உறவினர் குழந்தைகள், அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் சேர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட சொல்லி கொடுங்க.
ஒருவேளை விளையாட்டுக்கள் ஓட பெயர், நிபந்தனை, பலன்களை நீங்க மறந்திருந்தாலும் “த காரிகை” உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது.
ஏற்கனவே ஜோடி புறா விளையாடுவது எப்படி என ஒரு பதிவு போட்டு இருக்கிறோம் அதை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.
இப்போது பல்லாங்குழி விளையாடுவது எப்படி? என்பதை பார்க்கலாம்.
தேவையானவை
நீங்கள் இருக்கும் இடத்தில் பல்லாங்குழி விளையாடுவதற்கான வட்டமாக குழி செதுக்கிய பலகை ஏதும் இல்லாவிட்டால் நிலத்திலேயே ஏழு – ஏழு குழிகளாக 2 வரிசைகள் குழி தோண்டவும்.
இதில் புளியங்கொட்டை, சோழி அல்லது சிறு கற்களை நிரப்பி விளையாடலாம்.
ஒருவேளை மண்ணில் விளையாட மறுக்கும் குழந்தைகளாக இருந்தால் சுண்ணாம்பு கட்டிகளாலும் அல்லது சாக்பீஸ் ஆளும் தரையில் வட்டமிட்டு பல்லாங்குழி விளையாட வைக்கலாம்.
ஒவ்வொரு குழியிலும் 5 – 5 கற்களை போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
முதல் ஏதேனும் ஒரு குழியில் இருந்து 5 கற்களை எடுத்து அடுத்தடுத்த குழிகளில் ஒவ்வொன்றாக போட்டு வர வேண்டும்.
5 கற்கள் தீர்ந்து விட்டால் அதற்கு அடுத்துள்ள குழியில் இருந்து கற்களை எடுத்து அதற்கு அடுத்தடுத்து இருக்கும் குழிகளில் போட வேண்டும்.
இவ்வாறு 14 குழிகளிலும் ஒவ்வொரு கற்களாக போட வேண்டும்.
வெறும் குழி ஏதேனும் வருமாயின் அதைத் தொட்டு துடைத்து அடுத்த குழுவில் இருக்கும் கற்களை அப்படியே அள்ளி தனக்குரியதாக மாற்றிக் கொள்ளலாம்.
இப்படி தொடர்ந்து விளையாடும் போது ஒரு குழியில் 4 கற்கள் மட்டும் இருந்தால் அதை பசு என சொல்லி தனதாக்கிக் கொள்ளலாம்.
ஆட்டத்தின் முடிவில் யார் அதிக கற்களை வைத்திருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்.
கடைசியில் மொத்தமும் தீரும் வரை தான் இந்த ஆட்டம் நீடிக்கும்.
பல்லாங்குழி விளையாட்டின் பயன்கள்
எதிரில் இருப்பவரின் மன ஓட்டம் கற்றுக் கொள்ளலாம்.
மனக்கணக்கு போட இது எளிதாக எழுதவும்.
குழந்தைகளுக்கு இதுவரை பிடிக்காமல் இருந்த கணித பாடம் மிகவும் எளிதாகும்.
மன அழுத்தத்தை இது எளிமையாக நீக்கும்.
சக வயது நபர்களுடன், தோல்வியை ஏற்றுக்கொள்ள மனம் பக்குவப்படும்.
விடுமுறை நாட்கள் பயனுள்ளதாக அமையும்.
அனைத்துக்கும் மேலாக நீங்களே மறந்த ஒரு பாரம்பரிய விளையாட்டை பல ஆண்டுகளுக்கு பின்பு மன நிறைவுடன் விளையாடி உங்கள் குழந்தை பருவத்தை நினைவூட்டலாம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.