பழனி முருகன் கோவில் போறீங்களா? வழுக்கி விழுந்துடாதீங்க! கவனம்!

Palani Temple Cooling Paint Route Closed!

பழனி பாலதண்டாயுதபாணி கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு வழக்கமான நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அதுவே பங்குனி உத்திர சமயம் என்றால் சொல்லவா வேண்டும். கூட்டம் மம்மேனியாக வந்து குவிந்தது.

  • தீர்த்தக்குடம்

பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகனுக்கு அபிஷேகம் செய்ய தீர்த்தக் குடம், தீர்த்தக் காவடி எடுத்து வருவர். பொதுவாக பழனி மலைக் கோவிலுக்கு கொடுமுடியில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருவர். பழனி மலையேறி தீர்த்தக் குடத்தை சுமந்து வரும் அவர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்தால் வேண்டுவது நிறைவேறும் என்பது ஐதீகம்.

  • சூடு பொறுக்காது ஓடிய பக்தர்கள்

கோடை வெயில் தற்போதே சுட்டெரிப்பதால் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பாதம் அனல் மேல் நடப்பது போல் வெம்பிப் போனது. பாத யாத்திரையில் வழி நெடுக வெயிலில் வரும் பக்தர்கள் மீது நீரூற்றுவர். பின் அவர்களின் பாதையிலும் நீரூற்றி குளிர்விப்பர். ஆனால் கோவில் வளாகத்தில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் வெப்பத்தை அதிகம் கிரகிக்கும் என்பதால் சூடு பொறுக்க முடியாமல் பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர்.

  • கூலிங் பெயின்ட் அடித்த கோவில் நிர்வாகம்

பக்தர்களின் நிலையைக் கண்ட கோவில் நிர்வாகம் ஷெட் போடத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், யாரோ செலவைக் குறைக்கிறேன் என்ற பெயரில் கூலிங் பெயின்ட் அடிக்க யோசனை சொல்லியுள்ளனர் எனவே, பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் சூரிய ஒளியை எதிரொலிக்கும் வெண்ணிற கூலிங் பெயின்ட் அடித்தது கோவில் நிர்வாகம்.

  • தப்பிச் செல்ல முடியாத படி பேரிகார்டுகள்

பக்தர்கள் நடக்கும் தரையில் பெயின்ட்-ஐ அடித்தனர். அது மட்டுமின்றி அந்த பாதையைத் தான் பயன்படுத்த வேண்டும் எனக் கூறி, தடுப்பு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அவற்றின் இடையே கயிறும் கட்டப்பட்டது. காவலுக்கு போலீசாரும் நிறுத்தப்பட்டனர்.

  • சுவற்றுக்கான பெயின்ட தரையில் அடிப்பதா?

பொதுவாகவே பெயின்ட் என்பது வழவழப்புத் தன்மை கொண்டது. இயற்கையாகவே குளுமை தரும் கூலிங் பெயின்ட் ஆனாலும், அதை, சுவற்றில் அடிக்க வேண்டியது என்பது பலரும் அறிந்த விஷயமே. அப்படிப்பட்ட வழவழப்புப் பெயின்டை தீர்த்தக்குடம் எடுத்து வரும் பக்தர்களின் பாதையில் அடித்தனர். ஏற்கெனவே அவர்கள் கொண்டு வந்த தீர்த்தக் குடத்தில் இருந்த தண்ணீர் சிந்தியதாலும், அவர்கள் மீது ஊற்றிய நீர் ஆடையில் இருந்து சொட்டியதாலும் பெயின்ட் பாதையில் ஃப்ரிக்ஷன் எனும் உராய்வு தன்மை குறைந்தது.

  • வழுக்கி வழுக்கி விழுந்த பக்தர்கள்

பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக வழுக்கி வழுக்கி விழுந்தனர். 50-க்கும் மேற்பட்ட சிறுவர்களும், பக்தர்களும் அடுத்தடுத்து வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த கூலிங் பெயின் பாதை மூடப்பட்டது. வழுக்கி விழுந்து அடிபட்ட பக்தர்கள் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  • காலை வாறாத மாற்று ஏற்பாடு

பக்தர்கள் வெயில் இருந்து தப்ப வேறு நல்ல, காலை வாறாத மாற்று ஏற்பாட்டை பழனி கோவில் நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பக்தர்கள் அதிகம் காணிக்கையாக அள்ளிக் கொடுக்கும் தலங்களில் ஒன்று பழனி. அங்கு பக்தர்களுக்கு சரிவர நிழலை ஏற்படுத்தித் தருவதில் ஏன்? இந்தக் கஞ்சத் தனம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • பெயின்டை சுரண்டுவது யார்?

அதுசரி, தரையில் கொட்டிய பெயின்டை சுரண்டுவதே பெரும்பாடு தான். அதிலும் தரையில் லிட்டர் கணக்கில் அடித்த பெயின்டை இனி யார் சுரண்டி எடுப்பது என மலைத்துப் போய் நிற்கிறது கோவில் நிர்வாகம் என தகவல் வெளியாகியுள்ளது.

  • பங்குனி உத்திரத்துக்கு என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தமிழ் மாதத்தின் 12 மாதம் பங்குனி. 12 வது நட்சத்திரம் உத்திரம். பங்குனி உத்திரத்தன்று சிவனின் மோன நிலை கலைத்த மன்மதன் எரிக்கப்பட்டார். கலங்கி நின்ற தேவகர்ளுக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு சிவன் சக்தியை மணம் முடித்த நாளாக இது கருதப்படுகிறது. எனவே, திருமணத் தடை நீங்க, இங்கு கல்யாண சுந்தர விரதம் இருப்பார்கள். அதாவது, பகல் முழுவதும் உணவருந்த மாட்டார்கள், இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்களாம். நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும் என நம்ப்படுகிறது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE