பெண் தொழில் முனைவோர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

நீதா அம்பானி ரிலையன்ஸ் வாரியத்தில் இருந்து விலகுவதாகக் கூறி ராஜினாமா செய்தார். இருப்பினும் ரிலையன்ஸ் குழுமத்தின் அறக்கட்டளைத் தலைவராக நீதா அம்பானியே தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பெண்களுக்காகவும், தொழில் முனைவோர்களுக்காகவும் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் கவனிக்கத்தக்கது தான் இது.

அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 லட்சம் பெண் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவார்கள் என்பதே ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் நீதா அம்பானியின் முக்கிய அறிவிப்பாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 46-ம் ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் ஓணம் பண்டிகையன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவருமான நீதா அம்பானி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர், “ அமெரிக்க முன்னாள் அதிபரான பில்கேட்சின் மனைவி பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம் என்றார். இந்தச் சிறப்பு திட்டத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 லட்சம் பெண் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார். அவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம்மாவது வருமானம் ஈட்டுவதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்புத் திட்டம் குறித்து பில் கேட்ஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த 20 ஆண்டுகளாக கேட்ஸ் ஃபவுண்டேஷன் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கு வரும்போது, இந்நாடு சுகாதாரத்திலும், வளர்ச்சியிலும் அடைந்திருக்கும் முன்னேற்றம் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.” என்றார்.

இந்தியா பொருளாதார சிக்கல்களையும் தாண்டி போலியோவை ஒழித்து, வறுமை, ஹெச்.ஐ.வி பாதிப்பு, குழந்தை இறப்பு ஆகியவற்றைக் குறைத்துள்தை சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்பத்திலும் இந்தியா வளர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி. அடுத்த 3 ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக 10 லட்சம் பெண்களின் திறனை வேகமாக மேம்படுத்துவதற்காக நாங்கள் உதவ இருக்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் படித்த, படிக்காத பெண்களுக்குக் கூட தொழிற்பயிற்சி வழங்குவார்கள் என்பது பற்றிய அறிவிப்பை தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE