ஊட்டியில் கடும் தண்ணீர் பஞ்சம். . 30க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழப்பு

ஊட்டியில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூட தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. கூடலூர் அருகே உள்ள மசனகுடி பகுதியில் மக்கள் கால்நடைகளை வளர்க்கும் தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் காணப்பட்டு வறட்சி காணப்படுகிறது. இந்த நாள் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

மசனகுடி அருகே உள்ள கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் எப்போதும் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் தண்ணீர் குடிக்க வரும். ஆனால் தற்பொழுது அங்கும் தண்ணீர் வற்றி காணப்படுகிறது .

உணவு தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் எலும்பும் தோலுமாக காணப்பட்டு உணவு தண்ணீருக்காக சுற்றித்திரிந்தன .

இந்த நிலையில் கல்குவாரியில் ஒரே இடத்தில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து கிடக்கின்றன. இறந்த கால்நடைகளை கழுகுகள் உணவாக எடுத்துக் கொண்டதால் பெரும்பாலான கால்நடைகள் எலும்பாக காட்சியளிக்கின்றன . இதனால் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது.

கல்குவாரியில் கால்நடைகள் இறந்து கிடக்கும் காட்சிகள் வேதனையடைய செய்துள்ளது .

தொடர்ந்து மசனகுடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் பிரதான தொழிலாக கால்நடை வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உணவு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கால்நடைகளை காப்பாற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE