காற்றோட்டம் இருந்தும் இரவில் வியர்க்குதா? ஆபத்து !

கொளுத்தும் வெயிலுக்கு பகல் நேரத்தில் விட இரவில் உறங்கும் போது வேர்க்கத்தான் செய்யும். ஆனால் இரவில் நல்ல காற்றோட்டம் இருந்தும், குறிப்பாக ஏசியிள் படுத்திருந்தும் கூட வியர்த்துக் கொட்டினால், அது ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அப்படி இரவில் வியர்த்தால் என்னென்ன பிரச்சனை என்பதை மட்டும் “த காரிகை” உங்களுக்கு சொல்லவில்லை.

மாறாக என்ன செய்ய வேண்டும் என்ற தீர்வையும் உங்களுக்கு வழங்குவதால் செய்தியை முழுமையாக படிக்கவும்.

சரியான காற்றோட்ட வசதி இல்லை, போர்வையை முகத்தோடு மூடி படுத்திருப்பது, இறுக்கமான ஆடைகள், மது அருந்தி இருப்பது, கவலை, மன அழுத்தம் போன்றவை இரவில் வியர்க காரணமாக இருக்கலாம். இது சாதாரணம்.

ஆனால், இவை எதுவுமே இல்லாமல் நல்ல காற்றோட்டமான வீட்டில் உறங்கியும் கூட உங்களுக்கு அதிகமாக வியர்த்தல் என்பது சற்று ஆபத்துதான்.

பெண்களுக்கு இரவில் அதிகம் வேர்த்தால் அவர்கள் மாதவிடாய் நிற்கும் காலத்தை எட்டி விட்டார்கள் என அர்த்தம்.

ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவால் உடலில் அதிக உஷ்ணம் ஏற்பட்டு இவ்வாறு வியர்க்கும்.

மற்றொரு காரணம், தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாதது.

அப்படி இருந்தால், வழக்கத்துக்கு மாறாக உடலின் வெப்பநிலை அதிகரித்து இதயத்துடிப்பும் அதிகமாக துடித்து கைகள் கூட நடுங்கக்கூடும்.

நிறைய பசி, தாகம் இருந்தால் கூட தைராய்டு சுரப்பியின் பிரச்சனையாக இருக்கலாம். தைராய்டை உதாசீன படுத்தினால் அது கேன்சர் வரையும் எடுத்துச் செல்லக்கூடிய அபாயம் உள்ளது.

தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென உடலில் குளுக்கோஸ் அளவு குறைந்து விட்டால் அதிகம் வியர்க்கும்.

இரவில் தாமதமாக சாப்பிடுவது, மூக்கு முட்ட சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, பொரித்த உணவுகள், தக்காளி ஆகியவற்றை சாப்பிடும் போது இரவில் சுவாசக் கோளாறோடு வியர்வை அதிகமாகும்.

டிபி என்ற காசநோய், நோய் எதிர்ப்பு குறைபாடு, எச்ஐவி என்ற எய்ட்ஸ், இதய வால்வு தொற்று, எலும்பு தொற்று ஆகிய உயிருக்கு ஆபத்தான நோய் தொற்றுகள் இரவில் ஏற்படும் வியர்வையோடு தொடர்புடையவை என்பதால் மருத்துவரை அணுகுவது அவசியம் .

ஆனால், எந்த பிரச்சினையும் இல்லாமல் இரவில் சாதாரணமாக வியர்க்கிறது என்றால் அதனை உணவின் மூலமாக சரி செய்யலாம்.

மக்னிசியம் நிறைந்த விதைகள், தானியங்கள், நட்ஸ், பீன்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், உருளைக்கிழங்கு, சிட்ரஸ் பழங்கள் சாப்பிட வேண்டும்.

காஃபின் நிறைந்த பொருட்கள், ஆல்கஹால் உள்ளிட்டவற்றை கைவிட்டு வியர்வை அதிகமாக இருந்தால் மருத்துவரை உடனே ஆலோசிப்பது நல்லது.

வந்தபின் கதறுவதை விட வருமுன் காப்போம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE