தமிழகத்தில் சென்னை தலைநகரில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக உள்ளது. அதேபோல தமிழர்களின் பண்பாட்டு தலைநகரமாக விளங்கும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நோக்கம் என்ன?

உலகலவிய நூலக சேவையும், நவீன தகவல்களும் எளிதல் கிடைக்கக்கூடிய வகையில் அறிவுசார சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இந்த நூலகத்தின் முதன்மையான நோக்கமாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் உலக நாடுகளுடனும் இணைந்து பண்பாட்டு பரிமாற்றம் காண வேண்டும் என்பதற்காக சர்வதேச தரத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளி என பல்வேறு பிரிவினருக்கான தேவையை உணர்ந்து இந்த நூலகம் ஜூலை 15 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

மதுரையில் எங்கு அமைந்துள்ளது

சென்னையை பொருத்தவரை கோட்டூர்புரம் என்றாலே தற்போது அண்ணா லைப்ரரி என பெயர் மாறிவிட்டது. அதேபோல் மதுரையில் புது நத்தம் சாலையின் புதிய அடையாளமாக பிரம்மாண்டமாக உருவெடுத்து உள்ளது கலைஞர் நூலகம்.

நூலக அமைப்பு

ஒரு ஷாப்பிங் மாலை போல பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த நூலகம் 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது. அடித்தளம், தரைத்தளங்களுடன் கிட்டத்தட்ட 6 தளங்களைக் கொண்டது. சர்வதேச அளவில் பதிப்பிக்கப்படும் அறிவியல் நூல்கள், நவீன வழிகாட்டுதல்கள், வரலாற்று நூல்கள், மருத்துவ நூல்கள், தொழில்நுட்ப நூல்கள் என வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 3.30 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தை அலங்கரிக்கின்றன. மதுரையின் முக்கிய அதுவும் பிரம்மாண்டமான அடையாளமாக மாறப் போகும் இந்த நூலகத்தின் மொத்த மதிப்பு 114 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

என்னென்ன பிரிவுகள் உள்ளன?

6 தலங்களைக் கொண்ட இந்த நூலகத்தில் நூல்களை இரவல் வழங்கவும் பெறவும் தனியாக ஒரு பிரிவு உள்ளது. அதேபோல் வாசகர்கள் தாங்கள் கொண்டு வரும் சொந்த நூல்களை அமர்ந்து அமைதியான சூழலில் வாசிப்பதற்காக ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பிரிவு, கலைஞர் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, நாளிதழ், பருவ இதழ், ஆராய்ச்சி இதழ்கள், ஆங்கில நூல்கள், போட்டி தேர்வுகள், அரிய நூல்கள், பல்லூடகம், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரிய நூல்கள் பிரிவில் என்னவெல்லாம் இருக்கும்

1918 இல் வெளிவந்த ஜஸ்டிஸ் ஆங்கில இதழ்களும் 1824 -ல் வெளிவந்த சதுரகராதிரியின் முதல் பதிப்பு உள்ளிட்ட அரிய நூல்களும் இதில் இடம் பெற்ருக்கும். குறிப்பாக சதுரகராதி என்ற நூலின் முதல் பதிப்பு லண்டன், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அடுத்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிப்பதற்கு மட்டும் தான் நூலகமா?

இந்த நூலகம் வெறும் வாசிப்புக்கு மட்டுமா? என்றால் இல்லை இதில் குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், சிறார்களுக்கான திரையரங்கம், சிறார் அறிவியல் கூடம், பார்வை மாற்றத்திறனாளிகளுக்கான ஒலிநூல் ஸ்டுடியோ, கலைக்கூடம் ஆகியவை உள்ளன. இதனால் கலை, பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கற்றலுக்கான மையமாக இது இயங்கும். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த நூலகத்தில் மின்னுருவாக்க பிரிவுகளும் உண்டு. அரிய நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகளை உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையில் இது நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் அனைத்து புத்தகங்களையும் வாசிக்கும் வகையில் ஆடியோ ஃபார்மட்டுகளிலும் நூல்கள் வழங்கப்பட உள்ளன.

இதுல சிறப்பு அம்சங்கள் என்ன?

இங்கு குழந்தைகள் வந்து தங்களது கதை சொல்லல் திறமையை வெளிப்படுத்தலாம் மேலும் அறிவியல் அறிதல், கலைகள், விளையாட்டு, யோகா, கைவினை செய்முறைகள், போன்ற தொடர் நிகழ்வுகளும் விடுமுறை கால சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மகளிருக்கான சுய தொழில் பயிற்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான உயர்கல்வி, வழிகாட்டு நிகழ்ச்சிகள், மொழி, இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், ஊடகம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் தொடர் உரையாடல், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள், நம் தொன்மையான நாகரீகத்தை அறிந்து கொள்ள கல்வெட்டு, ஓலைச்சுவடி, பாறை ஓவியம், அகழாய்வுகள் குறித்த ஆளுமைகளுடன் உரையாடல்கள் என வாசிப்பு தேடலையும் அறிவு கொண்டாட்டமாக மாற்றும் முயற்சியில் இந்த நூலகம் களம் இறங்கியுள்ளது.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE