ரயில்ல போறீங்களா இதை படிக்காமல் போகாதீங்க புது ரூல்ஸ்
சமுதாயத்தின் அனைத்து மட்டத்தில் உள்ள மக்களுக்கும் ஏற்ற பயணமாக மாறி வருகிறது ரயில் பயணம். மிகக்குறைவான கட்டணத்தில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிப்பவர்களாகட்டும், ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் சொகுசாக பயணிப்போர் ஆகட்டும். சற்று குறைவான வேளையில் உடலுக்கு அதிக அசதி தராத பயணமாக அமையும் ரயில் பயணம்.
ரயில் பயணத்தில் பல்வேறு புதிய ரூல்ஸ்களை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. அவை பெரும்பாலும் பொது நடத்தை பற்றிய விதிமுறைகளாக உள்ளன
ஏற்கனவே உள்ள விதி
ரயில் பயணிகள், டிடிஇ, லோபோ பைலட், கேன்டீன் பணியாளர்கள், பிற ரயில்வே பணியாளர்கள் என அனைவருமே பின்வரும் விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். அதாவது புகை பிடித்தல், மது அருந்துதல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு ரயிலுக்கும் ரயில் பயணிகளுக்கும் ஆபத்து, அசவுகரியங்களையும் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
- புதிய விதிகள் என்னென்ன
ரயில் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்தோ, இல்லை வேறு எங்கேயும் ரயில் பெட்டிக்குள் நின்று கொண்டோ மிக அதிக சத்தத்தோடு தொலைபேசியில் உரையாடக்கூடாது. சக பயணிகளுடன் பேசும் போதும் உரத்த தொனியை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.
அதிக சத்தத்தில் பிறருக்கு தொந்தரவு தரும் வகையிலான உரத்த பாடல்களை ஒலிக்கவிடக்கூடாது. அதிக சத்தத்தில் படமும் பார்க்க கூடாது. அதேசமயம் பிறருக்கத் தொந்தரவின்றி ஹெட்போன்கள் அல்லது இயர் ஃபோன்கள் போட்டு கொண்டு பாடல் கேட்பதோ படம் பார்ப்பதோ எந்த தவறும் இல்லை.
இரவு 10 மணிக்கு மேல் நைட் லேம்ப் தவிர வேறு எந்த விளக்குகளும் எரிய அனுமதிக்கப்பட மாட்டாது.
இரவு பத்து மணிக்கு மேல் டிக்கெட்-ஐ டிடிஇ வந்து பார்க்க முடியாது
இரவு 10 மணிக்குப் பிறகும் குழுவாக பயணம் செய்தால் பயணிகள் சத்தமாக பேசிக்கொள்ள அனுமதி இல்லை.
நடுத்தர பர்த்தில் பயணிக்கும் பயணிகள், எந்த நேரத்திலும் தங்களது இருக்கைகளை திறக்கலாம் மடிக்கலாம். இது குறித்து, கீழ் பர்த்தில் இருக்கும் பயணிகள் புகார் செய்ய முடியாது. பெரும்பாலான கீழ் பர்த்-தில் பயணிக்க போட்டா போட்டி நிலவும் நிலையில், இந்த உத்தரவு இனி கீழ்பர்த்தின் மீதான பார்வையை மாற்றலாம் என கூறப்படுகிறது.
ஆன்லைன் டைனிங் சேவைகள் இரவு 10 மணிக்குப் பிறகு உணவு வழங்க முடியாது. இருந்த போதும் ஐ ஆர் சி டி சி-ல் உள்ள ஈ காட்டரின் சேவைகள் உணவை முன்கூட்டியே வாங்கிக் கொள்ள அனுமதிக்கிறது.
- உடைமைகளின் அளவு என்ன
எந்தெந்த பெட்டியில் பயணிப்போர் என்னென்ன மாதிரியான உடைமைகளை எடுத்துச் செல்லலாம் என்ற தகவல்களையும் ஐ ஆர் சி டி சி வெளியிட்டு உள்ளது. அதன்படி ஏசி கோச்சில் ஒரு பயணி தலா 70 கிலோ வரையிலான உடமைகளை எடுத்துச் செல்லலாம். ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்போர் தலா 40 கிலோ எடை எடுத்துச் செல்லலாம். இரண்டாம் வகுப்பில் பயணிப்போர் 35 கிலோ வரை உடமைகள் எடுத்துக் கொள்ளலாம் இது தவிர கூடுதல் லக்கேஜ் கட்டணத்துடன் பயணிகள் 150 கிலோ லக்கேஜையும் ஸ்லீப்பரில் 80 கிலோ லக்கேஜையும் இரண்டாவது இருக்கையில் 70 கிலோ லக்கேஜையும் கொண்டு செல்ல அனுமதி உண்டு.