சர்க்கரையில் கிளைகொலிக் ஆசிட் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சருமத்தை மிருதுவாக்க பயன்படும் வேதிப்பொருள் ஆகும். ஏற்கனவே சருமத்தில் இறந்து, அப்புறப்படுத்தப்படாமல் இருக்கும் டெத் செல்களை நீக்க 4 வகையான சுகர் ஸ்க்ரப்புகள் உங்களுக்கு உதவும்.


இது சரும வறட்சியையும் நீக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக வெயில் காலத்தில் உதடு மட்டும் இன்றி சருமமும் வெடிப்புக்கு ஆளாகும். அவற்றை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது “த காரிகை“-யின் கட்டுரை பக்கத்தில் பார்ப்போம்.

  • எலுமிச்சையுடன் சர்க்கரை

எலுமிச்சம் பழச்சாறு அதிலுள்ள சிட்ரிக் ஆசிட் தன்மையால் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. குறிப்பாக தூய்மைப்படுத்தும் அனைத்து திரவங்களிலும் சிட்ரிக் ஆசிட் நிறைந்திருக்கும். அத்தகைய இயற்கையின் கொடையான எலுமிச்சை சாற்றில் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து சருமத்தில் தேய்க்க வேண்டும். குட்டி குட்டியான கட்டிச் சர்கரைகள் கரையும் வரை சருமம் முழுவதும் தேய்க்க வேண்டும். பின் அவற்றை குளிர் நீரில் கழுவி விட சருமம் மிருதுவாகும்.

  • கிரீன் டீ சர்க்கரை

கிரீன் டீயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்துக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய ஒன்று. அத்தகைய கிரீன் டீயின் இலைகளை அல்லது துகள்களை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். பின், அதில் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் அளவுடன் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளவும். மூன்றையும் நன்றாக கலக்கி பேஸ்ட் போல செய்து கொள்ளவும். பின் அதனை சருமத்தில் நன்கு பூசிக்கொண்டு சிறிது நேரம் ஸ்க்ரப் செய்யவும். பின் அதனை குளிர் நீரில் கழுவி விட உங்கள் சருமம் ஒரு குழந்தையின் சருமத்தை போன்று மிருதுவாக மாறிவிடும்.

  • ஓட்ஸ் உடன் சர்க்கரை

ஓட்ஸ் ஆனது இயற்கையிலேயே ஸ்க்ரப்பிங் ஏஜெண்டாக பயன்படுத்தத் தக்க ஒன்று. அதன் சொரசொரப்பு தன்மை ஸ்க்ரப்பிங்கிற்கு மிகவும் ஏற்றது. அத்துடன் சற்று ஆலிவ் ஆயிலையும் உடன் கலந்து, சர்க்கரை உடன் சேர்த்து பேஸ்ட் போல குழப்பி ஸ்கிரப்பராக பயன்படுத்தலாம்.

  • ஆலிவ் ஆயில் உடன் சர்க்கரை

ஆலிவ் ஆயிலுக்கு இயற்கையிலேயே மிருதுவாக்கும் தன்மையும் வறட்சியை நீக்கும் தன்மையும் அதிகம் உண்டு. பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளில் ஆலிவ் ஆயிலை பயன்படுத்த காரணம் உடல் வறட்சியையும் நீக்கி குளிர்ச்சி அளிக்கத் தான். எனவே ஆலிவ் ஆயில் உடன் சர்க்கரை கலந்து சருமத்தில் ஸ்கிரப்பராக பயன்படுத்தலாம். இது முக வறட்சி நீக்குவது மட்டுமின்றி புதுப்பொலிவை வழங்கவும் உதவும்.

இது போன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள இந்த “த காரிகை“யின் சமூக வலைதள பக்கங்களை பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE