பிக்பாஸ் வீட்டில் பவா சொன்ன கதையால் வந்த சிக்கல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எழுத்தாளராகவும் கதை சொல்லி ஆகவும் அறிமுகமான பவா செல்லதுரை கூறிய ஒரு கதை அந்த வீட்டில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் நடனம், நடிப்பு, காமெடி, பாடல் என பல திறமைகளில் பலரும் கவனம் ஈர்க்க முயற்சிப்பார்கள். அதுபோல்தான் பவா செல்லதுரை. கடந்த 3 நாட்களிலும் தன்னோட கதை சொல்லல் திறமையால் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் எழுதிய சுள்ளிக்காட்டின் தமிழ் பெயர்ப்பான சிதம்பர நினைவுகள் நூலில் இருந்து ஒரு கட்டுரையை அவர் கூறிய போது அது பேசுளானது.

“வீட்டில் பிற்பகலில் யாரும் இல்லாத நேரம். ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் பாலச்சந்திரன். கதவு தட்டப்படுகிறது. ஒரு பெண் அங்கு வந்து இருக்கிறார். ஊறுகாய் விற்பதற்காக வந்த பெண் என்றாலும் அவர் மிகவும் அழகாக இருந்தார். தனிமை வேறு. யாரும் உடன் இல்லாத நேரம் என்பதால் அத்துமீறி அந்த பெண்ணை தொட்டு விடுகிறார் கவிஞர். பின்பு அவருக்கு ‘பளார்’ என்று ஒரு அறை அந்த பெண்ணிடம் இருந்து விழுகிறது”

இதை அடுத்து பேசிய அந்தப் பெண் ”நீங்களும் உங்கள் மனைவி விஜயலட்சுமி டீச்சரும் எங்க காலேஜுக்கு வந்தபோது உங்ககிட்ட நாங்க ஆட்டோகிராப் வாங்கி இருக்கோம். வாழ்வதற்கு வேறு வழியில்லாமல் தான் ஊறுகாய் விற்க வந்தோம். ஆனால் இலக்கியவாதி ஆன நீங்களே இப்படி நடந்தா என்ன பண்றது? இப்படி கீழ்தரமா நடந்துக்கிறத இன்னையோட விட்ருங்க. நான் வெளியே யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.” என அந்த பெண் கூறிய வார்த்தைகள் அவர் கொடுத்த அறையை விட அதிகமாக அந்த கவிஞரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியதாக சுட்டி காட்டினார்.

இதைக் கேட்ட ஹவுஸ் மேட்ஸ் இது என்ன கதை? இந்த கதையோட மாரல் ஆப் தி ஸ்டோரி என்ன? தப்பான செய்தி எல்லாம் மக்கள் கிட்ட கொண்டு சேர்க்காதீங்க என்று கூறி பவா செல்லதுரையை பல கேள்விகளால் தொலைதடுத்தனர்

முதல் நாளிலேயே நடிகர் கமல்ஹாசன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போது தனக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது என்று பவாவிடம் கமல் கேட்டார். அதற்கு இந்த சிதம்பர நினைவுகள் என்ற புத்தகத்தில் தனது வாழ்க்கையை மிகவும் நிர்வாணப்படுத்தி அப்படியே வெட்ட வெளிச்சமாகி கவிஞர் எழுதியிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

ஒரு கவிஞன் தவறே செய்தாலும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அதுவும் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் தைரியம் அவரிடம் இருந்ததாக இவர் பாராட்டினாலும், ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து விட்டு பின்பு திருந்துவது, இதை ரொமான்டிசைஸ் பண்ணுவது எல்லாம் தவறு என்று ஹவுஸ்மேட்ஸ் அதனை விவாத பொருளாக மாற்றி விட்டனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE