மார்பகம் தொடர்பான கட்டுக்கதைகள்
பெண்களின் மார்பகங்கள் தொடர்பாக சமூகத்தில் பல்வேறு கட்டுக்கதைகள் உலவி வருகின்றன. எனவே அது பற்றிய தெளிவான புரிதலையும், உண்மையையும் விளக்குகிறது த காரிகை.
மார்பகத்தின் அளவு மாறாதா?
வாழ்நாள் முழுவதும் பெண்கள் தங்களது மார்பக அளவு என்றுமே மாறாது என்ற ஒரு தவறான கண்ணோட்டத்தை வைத்திருப்பர். ஆனால் மிகச்சிறிய அளவில் உடல் எடை அதிகரித்தாலும் அவர்கள் அணியும் உள்ளாடை சைசிலும் அது தாக்கம் ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது மார்பகத்தில் அளவு அதிகரிப்பை கண்காணித்து அதற்கு ஏற்ப உள்ளாடை அணிவது நல்லது. தவறான உள்ளாடை அணிவதால் ஏற்படும் விளைவு என்ன என்பதை த காரிகையின் இந்த கட்டுரையில் காணலாம்
மார்பகம் தொங்குதல்
தாய்ப்பால் ஊட்டும் போது மார்பகம் தொங்கக் கூடும் என்ற பேச்சு பொதுவாகவே பெண்கள் மத்தியில் பரவலாக இருக்கும். ஆனால் உண்மையில் தாய்ப்பால் கொடுப்பதால் மட்டுமே மார்பகங்கள் தொங்குவதில்லை வயது அதிகரிப்பும் மார்பகம் தொங்குவதற்கான ஒரு முக்கியமான காரணமாகும். எனவே இதைக் காரணம் காட்டி யாரேனும் தாய்ப்பால் ஊட்டுவதை தவிர்ப்பதாக உங்களுக்கு தெரிந்தால் இந்த பதிவை அவர்களுக்கு அனுப்பி தெளிவுபடுத்துங்கள்.
உள்ளாடையுடன் தூங்க கூடாது?
உள்ளாடை அணிந்து கொண்டு தூங்குவது ஆபத்தானது என்ற பேச்சு மார்பகங்கள் பற்றிய ஒரு தவறான சித்தரிப்பு ஆகும் உண்மையில் அண்டர் வயர் எனப்படும் பிராக்களை அணிந்தால் மட்டுமே அது ஆபத்தாகும், மற்றபடி சாப்ட் ஆகவும் நெகிழ்வுத் தன்மை கொண்ட பிராக்களை அணிந்தபடியும் தூங்குவதால் பெரிய அளவு பாதிப்பு கிடையாது.
உடற்பயிற்சியால் அளவு மாறும்
பெண்கள் ஜிம்முக்கு சென்றாலும் உடற்பயிற்சி சென்றாலும் மார்பகத்தின் அளவு அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. மார்பகம் தசையால் அல்ல திசுக்களால் ஆனவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஹார்மோன் மாற்றம் உடல் எடை மாற்றம் மட்டுமே மார்பகத்தின் அளவை மாறுபடுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்
தாய்ப்பாலால் மாறும்?
பெரிய மார்பகங்களை மட்டுமே குழந்தைக்கு தேவையான அதிகளவு பால் சுரக்கும் என்ற கண்ணோட்டமும் தவறானதாகும். எனவே கர்ப்ப காலத்தில் மார்பகத்தின் அளவு மாறி இருப்பதை பொறுத்து பால் சுரக்கும் அளவை கண்டறிதல் என்பது தவறான புரிதலாகும்.
பிரா அணிந்தால் புற்றுநோய்?
பிரா அணிவது மார்பக புற்று நோயை உண்டாக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே பிரா அணிவதால் உடலின் இயற்கையான செயல்பாடுகளில் எவ்வித தாக்கமும் ஏற்படாது
மார்பக வளர்ச்சி நின்று விடுமா?
பொதுவாக பெண்கள் பூப்பெய்ததும் மார்பகத்தில் வளர்ச்சி நின்று விடும் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் ஆகும். உண்மையில் எப்போது மார்பக வளர்ச்சி நிற்கும் என்பதை யாரும் உறுதியாக சொல்லிட முடியாது. பலருக்கும் 20 வயதுக்கு பின்பும் மார்பக வளர்ச்சி தொடர்ந்துள்ளது.
கட்டியே இல்லாமல் புற்றுநோய் வராதா?
மார்பகத்தில் கட்டியே இல்லை என்றாலும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. மார்பகத்தின் நிறம் மாறுதல், இரு மார்பகங்களில் ஒரு மார்பகத்தின் அளவு மாறுதல், முளைக்காம்பில் திரவ வெளியேற்றம் அல்லது வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது புற்றுநோய் அறிகுறிகளாக இருக்கலாம். கவனம்!!!!!