”உலக அழகியே. .” திருமணமான பெண்களுக்கு அழகுப்போட்டி – எப்படி பங்கேற்பது?
பெண்கள் என்றாலே அழகுதான். ஆனால், திருமணம் ஆன பின் அவர்கள் அழகு குறைந்து விடுவதாக கூறப்படுவதை நம்பக் கூடாது. அவர்களது பெண்மையை போற்றும் வகையில் திறமையை மேம்படுத்தும் வகையிலும் மிஸஸ் வேர்ல்ட் இன்டர்நேஷனல் என்ற போட்டி நடத்தப்படுகிறது.
பெண்கள் அவர்களது அழகையும், திறமையையும் மேம்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு மதிப்பு ஊட்டி கொண்டாடும் வகையிலும் ஒரு உலகளாவிய மேடை உருவாகி வருகிறது.
பெரிய பெரிய கனவுகள் காணும் பெண்களுக்காக இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல மில்லியன் திருமணமான பெண்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் தங்களது கனவுகளை பின் தொடர சிறகுகள் பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
பெண்களின் அழகினை கொண்டாடும் வகையிலும் அவர்களின் சக்தியையும் திறமையும் கற்பனை திறனையும் மேம்படுத்தும் வகையிலும் மிஸ்ஸஸ் வேர்ல்ட் இன்டர்நேஷனல் போட்டிகள் நடைபெற உள்ளன.
பர்கா நங்க்யா என்ற பிளஸ் சைஸ் மாடல் தான் இந்த மிஸ்ஸஸ் வேர்ல்ட் இன்டர்நேஷனல் போட்டியின் இயக்குனராக உள்ளார்.
மாடலிங், நடிப்பு, திரை வாய்ப்பு, மேடை நாடகம், வணிக விளம்பரங்கள், இசை, வீடியோக்கள் என பல வாய்ப்புகள் இதில் பங்கேற்று இதில் ஜெயிப்போருக்காகக் காத்திருக்கின்றன.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை இதற்கான ரெஜிஸ்ட்ரேஷன் நடக்கிறது. டிசம்பர் 20ஆம் தேதி போட்டோ ஷூட், 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை குரூமிங் வகுப்புகளும் நடைபெறும். டிசம்பர் 24ஆம் தேதி கிராண்ட் ஃபினாலே நடைபெற உள்ளது.
இந்தியாவில் 8 இடங்களில் மிஸ்ஸஸ் வேர்ல்ட் இன்டர்நேஷனல் போட்டிக்கான ஆடிஷன்கள் நடைபெற உள்ளன.
அக்டோபர் 1-ல் டெல்லி, அக்டோபர் 8-ல் மும்பை, அக்டோபர் 15-ல் கொல்கத்தா, அக்டோபர் 22-ல் பெங்களூர், அக்டோபர் 29-ல் ஹைதராபாத், நவம்பர் 5-ல் அகமதாபாத், நவம்பர் 12-ல் லக்னோ, நவம்பர் 19-ல் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் ஆடிஷன்கள் நடைபெற உள்ளன.
துபாய், லண்டன், நியூயார்க், மெல்பர்ன் ஆகிய நாடுகளிலும் ஆடிசன்கள் நடைபெறவுள்ளன.
இதற்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ் ஆக ரூ.3,000 செலுத்த வேண்டும். 21 வயது முதல் 48 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்கலாம். உயரம் 5 அடிக்கு அதிகமாக இருக்க வேண்டும். திருமணமானவரும், கணவரை பிரிந்தவரும், தனி பெற்றோராகவோ அதாவது சிங்கிள் பேரன்ட், விவாகரத்து ஆனவராகவோ, கணவரை இழந்தவராகவோ கூட இருக்கலாம்.
இந்தியராகவும் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஆகவும் இருக்கலாம்
இரண்டு போட்டோக்கள் விண்ணப்பத்தின் போது பதிவேற்றப்பட வேண்டும். இதை அடுத்து பெயர், வயது, திருமணத்தின் நிலை, தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள், ஈமெயில் அட்ரஸ், முகவரி, உயரம், எடை, உடல் அளவு, ஆடிஷன், எந்த ஊரில் ஆடிசஷன் கலந்து கொள்ளப் போகிறோம் என குறிப்பிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு + 91 9910077361 என்று எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது whatsapp-ம் செய்யலாம்.
பணம் செலுத்தும் முன் சரியான நிறுவனம்தானா? என சோதித்துக் கொள்ளவும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.