மொட்டை தலையில் மிசஸ் யுனிவர்ஸ் மகுடம். பேரழகி யார்?
திருப்பாச்சி படத்தில் தொடக்க காட்சியே முடியை வைத்து தான். அழகு என்பது போல ஒரு பெண்ணுக்கு முடி தான் என கடுப்பேற்றிய பெண்ணின் ஜடையை வெட்ட முயலும் காட்சிதான் அது.
நகைப்போடு ஒரு வீட்டில் அந்த காட்சி அமைந்தாலும் இந்திய சமூகத்தில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் முடியை வைத்து தான் சிலர் அழகையே மதிப்பிடுவார்கள்.
காலையில் எழுந்து, குளித்து, கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆவது கண்ணாடி முன்னே நின்று தலை சீவி செல்லும் பெண்கள் இன்றும் உள்ளனர்.
அப்படி அவ்வளவு நேரம் தலையை சீவிக்கூட, பள்ளிக்கு, கல்லூரிக்கு, அலுவலகம் சென்றபின் மீண்டும் ரெஸ்ட் ரூமுக்கு சென்று தலையை ஒதுக்கி கொண்டு தான் பலரும் வகுப்புக்குள்ளோ அலுவலக அறைக்குள்ளோ காலடி எடுத்து வைப்பார்கள்.
அப்படி பெண்கள் பலர் சிகைக்கும் சிகை அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அழகு அதில் இல்லை என நிரூபித்து மிசஸ் யுனிவர்ஸ் போட்டியை வென்றிருக்கிறார் ஒரு பெண்.
யார் இவர்?
கேதகி ஜானி என்ற இவர் முதல் அல்பீசியன் மாடல் அழகி
அதாவது முடியே இல்லாத மாடல் அழகி என்று கூறலாம். இவருக்கு அல்பீசியா என்ற நோய் வந்தபோது அனைத்து முடியும் உதிர்ந்து விட்டது.
சமூகத்தில் தலை காட்ட மட்டுமின்றி, கண்ணாடி முன் நிற்க கூட தைரியம் இழந்து தன்னம்பிக்கை இழந்து காணப்பட்ட அவர் தனக்குள் அந்த இரண்டையும் வரவழைத்து கண்ணாடியை பார்த்தார்.
தனது முடி இருந்த பகுதியை அழகான டாட்டூக்களால் நிரப்பிக் கொண்டார்.
தலையில் முடியே இல்லாவிட்டாலும் அவர் பல மாடல் அழகி போட்டிகளில் பங்கேற்றார். தற்போது மிசஸ் யுனிவர்ஸ் என்ற பட்டம் வென்று மகுடமும் சூடியுள்ளார் கேதகி ஜானி.
அழகு என்பது முடியில் இல்லை. பெண்ணின் மனதுக்குள் உள்ள தன்னம்பிக்கையிலும், அன்பிலும், அறிவிலும் உள்ளது என்று இவர் நிரூபித்து இருக்கிறார்.
கேத்தகி ஜானியின் இந்த அசத்தலான தன்னம்பிக்கை பற்றி நீங்கள் கூறும் கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.