தீபாவளிக்கு லட்டு செய்வது பலரது வீட்டிலும் ஒரு மரபாகவே கடைப்பிடித்து வருகின்றனர். என்னதான் கடைகளிலும் போனஸ் ஓடு சேர்ந்து இனிப்புப் பெட்டகங்கள் வந்தாலும் அதெல்லாம் நமது வீட்டு ஆட்களுக்கு ஒரு மணி நேரத்தில் காலியாகிவிடும் என நினைக்கிறீர்களா? எனவே குறைந்த செலவில் அதிக லட்டுக்குள்ள செய்வது எப்படி? என பார்ப்போம்.

வழக்கமாக கடலை மாவை கரைத்து ஊற்றி பொறிக்க வைத்து, பின் அதில் லட்டு பிடிப்பது வழக்கம். ஆனால், கடலை மாவும் இல்லாமல் பூந்தியும் பொறிக்காமல், சல்லடைக்கரண்டியே தேவையில்லாமல் அடையார் ஆனந்த பவன் ஸ்டைலில் ஆரஞ்சு நிறத்திலான முடிச்சூர் லட்டு செய்வது எப்படி? என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு 300 கிராம்

சர்க்கரை ஒன்றரை கப்

ஏலக்காய் தூள் (தேவைப்பட்டால்)

கலர் பொடி (தேவைப்பட்டால்)

குங்குமப்பூ சிறிதளவு

நெய் சிறிதளவு

முந்திரி + கிஸ்மிஸ் பழம் தலா 2 ஸ்பூன்

வெள்ளரி விதை

எப்படி செய்வது?

முதலில் கடலை பருப்பை எடுத்து அதை தண்ணீரில் 2 அல்லது 3 முறை நன்கு அலசி கொள்ளவும்.

பிறகு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் அதில் இருந்து தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும்.

ஒரு மிக்சியில் இட்டு கொர கொரவென்ற பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து அவற்றை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

பொரித்த உருண்டைகளை நன்கு ஆற வைத்துக்கொள்ளவும்.

அவை ஆறிய பிறகு மிக்சியில் போட்டு மீண்டும் கொற கொறவென்ற பதத்தில் அரைக்கவும்.

பிறகு, ஒரு புறம் வாணலியில் எடுத்து அதில் சர்க்கரையை இட்டு மிதமான சூட்டில் பாகு காய்ச்சவும்.

தொடர்ந்து கலர் பொடி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

ஆரஞ்ச் நிற கலர் பொடி சேர்க்க விரும்பாதவர்கள் காய்ச்சிய பாலில் சிறிது குங்குமப் பூவைக் கலந்து அதிர் வரும் மஞ்சள் கலந்த மைல்ட் ஆரஞ்ச் நிறத்தை நிறமிக்கு பயன்படுத்தவும்

பிறகு கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள லட்டு மாவை அதில் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

இதற்கிடையில், முந்திரி பருப்பு, உலர் திராட்சை பழத்தை நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

இது வேண்டாம் என நினைப்பவர்கள் வெள்ளரி விதைகளை நெய்யில் பொறித்து சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு அவற்றை நன்கு மிக்ஸ் செய்து வைத்துள்ள லட்டு மாவுடன் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.

இந்த கலவை நன்கு ஆறிய பிறகு அவற்றை லட்டு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.

இப்போது தீபாவளி ஸ்வீட் “முடிச்சூர் லட்டு” தயார்.

இந்த லட்டை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி உறவினர்களுக்கு பெருமையோடு கொடுத்து மகிழுங்கள். ஹேப்பி தீபாவளி. . . .. !

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE