மாமியார்னாலே பிரச்சனையா? இதான் காரணமா இருக்கலாம்.
சில மாமியார்கள் அம்மா போன்று அன்பாகவும் அனுசரனையாகவும் இருக்கும் உறவாக அமைந்துவிடுவார்கள். அவர்கள் கொடுத்து வைத்த பாக்கியலட்சுமிகள் தான்.
ஆனால் சில சீரியல்களில் காட்டுவது போல் எல்லா வீடுகளிலும் மாமியார் மருமகள் சண்டை வருவதில்லை. இருந்தபோதும் பெரும்பாலான வீடுகளில் மாமியார் மருமகள் என்றாலே எதிரும் புதிருமான உறவு முறையாகி போகிறது. இதனால் மருமகள் வீட்டை விட்டு வெளியேறி தனது கணவனோடு அல்லது தனியாகவோ வாழ தொடங்குகிறார்.
இதற்காக பல அடிப்படை காரணங்கள் உள்ளன. அப்படி மாமியார் மருமகளுக்குள் என்னதான் பிரச்சனை? என தற்போது பார்க்கலாம். குறிப்பாக மாமியார்கள் ஏன் வில்லிகளாகின்றனர் என்றும் பார்க்கலாம்.
“எப்போது மருமகள் வருவாள்?, தமது தலையில் உள்ள சுமைகள் அனைத்தையும் எடுத்து எப்போது அவள் தலையில் சுமத்துவது?” என பல மாமியார்கள் காத்திருக்கும் உணர்வு தான் இங்கு முதல் பிரச்சனையே. மருமகள் வந்த பின்பு தனது வீட்டு கடமைகள் அனைத்தையும் அவர்கள் மீது திணிப்பது பல மருமகளுக்கு பிடிப்பதில்லை.
நடைமுறைக்கு ஒத்து வராத பழைய சமூக பழக்கவழக்கங்களை இன்னும் பின்பற்ற வேண்டும் அதை கட்டாயமாக பின்பற்றியே ஆக வேண்டும் என அதிகாரம் செய்வது, பாடு படுத்துவது என பல வில்லத்தனமான விஷயங்களை அவர்களுக்குப் பிடிக்காத போதும் திணிப்பது எதிராக மாறிவிடுகிறது.
மருமகள் வந்துவிட்டால். அவள் தான் இந்த வீட்டின் இல்லத்து அரசி, மகாராணி என்றெல்லாம் பட்டம் சூட்டாமல் இந்த வீட்டில் எனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு செயலிலும் காட்டிக்கொண்டே இருக்க முயல்வது சில மாமியார்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் செய்யும் பிழையாகிப் போகிறது.
ஒவ்வொரு விஷயத்துக்கும் தன்னைக் கேட்டுத்தான் மருமகள் செய்ய வேண்டும், தன்னை கேட்காமல் ஏன் இப்படி செய்தாய்? அதனால் தான் தவறாகிவிட்டது, என தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவே சில மாமியார்கள் போட்டி போடுகின்றனர்.
மருமகளின் உணர்வுகள் வேறு விதமாக இருக்கலாம். தலைமுறை இடைவெளி அவர்களுக்கு சில விருப்பு வெறுப்புகளை மாற்றி இருக்கலாம். ஆனால் அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை கேட்கவும் மதிக்கவும் கூடாது என சில மாமியார்கள் நினைப்பதும் அவர்களுக்கு எதிராக முடிகிறது.
மருமகளின் சுதந்திரமான முடிவுகளை பறித்து எல்லாவற்றையும் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என சில மாமியார்கள் நினைப்பது வில்லிகளாக அவர்களை மாற்ற வாய்ப்புள்ளது. அவர்களின் சுதந்திரத்தையும் தனது சுதந்திரத்திற்கான எல்லைகளையும் முன்கூட்டியே வகுத்துக் கொள்வது என்பது மாமியார் மருமகள் உறவில் சிறப்பான ஒரு பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.
கணவன்மார்கள் மனைவிக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் அந்த கடுப்பானது மாமியார் மீதுதான் பல வகைகளில் சென்று விழும். அதுமட்டுமின்றி தனது பெற்றோர் மீது குறையே இருந்தாலும் அந்த கணவன் அவர்கள் சொல்லுக்கு கீழ்ப்படிந்து தனது மனைவியை ஆட்டுவிப்பது என்பது மாமியாரை வில்லியாக மாற்றிவிடும் மற்றொரு செயல் முறையாகும்.
வேண்டுமென்றே உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வந்த மருமகளை துன்புறுத்துவது மிகவும் கொடுமை. அதிலும் எல்லாவற்றிற்கும் மருமகளால்தான் பிரச்சனை என குறை கூறுவதும் அவர் காது படும்படி கிசுகிசுப்பதும் பின்பு தன் மகன் வந்து தட்டிக் கேட்ட பின்பு அழுது புலம்பி நாடகமாடுவதும் சில Rugged ஆன மாமியாக்கள் கையாளும் வில்லத்தனமான யுக்தி ஆகும்.
இதில் உங்கள் மாமியார் மருமகள் உறவு எத்தகையது? என்பதை கமெண்ட் செக்ஷனில் சொல்லுங்கள் பார்ப்போம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.