பெண்களின் வேலையை பறிக்கும் திருமண வாழ்க்கை?
பெண்கள் எவ்வளவு நல்ல படியாக படிப்பில் முன்னேறினாலும், ஆண்களை விட அதிக அளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் திருமணத்திற்கு முன் தனது இணையை விட அதிகம் சம்பாதித்தாலும் கூட திருமணத்துக்கு பின் அவற்றையெல்லாம் கணவனின் தொழிலுக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் தியாகம் செய்வது பன்னெடுங்காலமாக தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளை விரும்பிய அளவு மிகப்பெரும் படிப்புகளை சிரத்தை எடுத்து படிக்க வைக்கின்றனர். திருமணமும் வெகு சிறப்பாக நடத்தி வைக்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு பின் குழந்தை என்று வந்ததுமோ அல்லது குடும்பத்தில் உள்ள முதியவர்களை கவனிக்கும் பொருட்டோ பல பெண்கள் அதாவது குறிப்பாக 40% பெண்கள் வேலையை விட்டு விடும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வின்படி ஒரு ஆண் 100 ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் அதே பணியை செய்யும் ஒரு பெண் 77 ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
பொழுதுபோக்கு
என்னதான் ஒரு ஆண் சம்பாதித்தாலும், தனது பணி நேரம் போக மீத நேரங்களில் பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுகிறார். ஆனால் ஒரு பெண் அலுவலகத்திற்கு சென்று, ஒரு ஆண் செய்யும் அதே பணியை செய்துவிட்டு வீடு திரும்பினாலும் அவர் வீட்டில் உள்ள வேலைகளை செய்வது, சமைப்பது, துவைப்பது, பாத்திரம் துலக்குவது, வீட்டை சுத்தமாக பராமரிப்பது, குழந்தைகளை கவனிப்பது, அவர்களுக்கு படிப்பில் உதவுவது, வீட்டில் உள்ள முதியோர்களை கவனித்துக் கொள்வது என பலதரப்பட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும், பொழுது போக்கும் வாய்ப்பே கிடைக்காது இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் தங்களது கவலைகளை வென்ட் அவுட் செய்ய அதாவது வெளியேற்ற எவ்வகை வழியும் என்று தவிப்பதால் ஒரு கட்டத்தில் வேலையை விட்டு விடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆணைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் கூட, குழந்தை பிறப்புக்கு பின் அவர்கள் கட்டாயம் வேலையை விட்டு ஆக வேண்டிய சூழ்நிலையை இந்த சமூகமும் அவர்களின் பால் கட்டாயத்தை புகுத்துவதாக நம்பப்படுகிறது.
10% பெண்கள் மட்டுமே தங்களது வீட்டு வேலைகளில் கணவன்மார்கள் உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் இது அனைத்து நாட்களிலும் நடப்பதில்லை என்றும் தங்களுக்கு உடல் நலம் இன்று போகும் நாட்களில் சில கணவன் மார்கள் உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்
முன்பைப் போல அல்லாமல் பெண்கள் படிப்பிலும் தொழிலும் அதிகம் முன்னேறி வருகின்றனர். ஒரு மருத்துவப் பணி ஆகட்டும், பொறியியல் பணியாகட்டும், அறிவியல் சார்ந்த விஞ்ஞானி போன்ற ஒரு உயரிய பதவியாகட்டும் எதுவாக இருந்தாலும் வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு, குழந்தைகள் பராமரிப்பு என வந்துவிட்டால் பெண்கள் மட்டுமே செய்தாக வேண்டிய சூழல் உள்ளது. இது காலமாற்றத்திற்கு ஏற்ப ஆண்கள் பெண்களை வேலைக்கு செல்ல அனுமதித்து அதனால் வரும் பண பலன்களை அடைகின்றனர் ஆனால் தாங்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நடைமுறை எதார்த்தத்தை ஏற்க மறுப்பதே விவாகரத்துக்கள் அதிகரிக்ககாரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் பெரும்பாலான படித்த பெண்கள் மத்தியில் சகிப்புத்தன்மை குறைந்த விவாகரத்து போக்கு அதிகரிக்கும் சூழல் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்