ஸ்கூல் வேன் வரப்போகுது, பசங்க சாப்ட ஸ்னேக்ஸ் எதும் இல்லையே? இன்னைக்கு ஸ்போர்ட் வேற இருந்துச்சு. டயர்டா வர்றவங்களுக்கு ஸ்ட்ராங்காவும், ஹெல்தியாவும், டேஸ்டாவும் எதாச்சும் செஞ்சு கொடுக்கனும்னா இதை ட்ரை பண்ணுங்க.

பாசி பயிறு – 1 கப்

ஏலக்காய் – 2

வெல்லம் – முக்கால் கப்

அரிசி மாவு – ஒரு கப்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சுக்குப்பொடி – கால் ஸ்பூன்

தேங்காய் – கால் கப்

வெள்ளை எள் – ஒரு ஸ்பூன்

நெய் – தேவையான அளவு

எண்ணெய் – பொரித்து எடுக்க

மைதா அல்லது கார்ன் ஃப்ளோர் – 2 ஸ்பூன்

எப்படி செய்வது?

ஒரு கப் பாசிப்பயிறை குறைவான தீயில் மணக்க மணக்க பொன்னிறமாகும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆறவைத்து ஒரு தண்ணீர் இல்லா மிக்ஸி ஜாரில், 2 ஏலக்காய் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நெய் சேர்த்து நன்றாக காய்ந்தவுடன், தேங்காய், வெள்ளை எள் சேர்த்து ட்ரையாக வறுக்கவும்.

பொடித்து வைத்துள்ள மாவுடன் வறுத்த தேங்காய் மற்றும் எள், சுக்குப்பொடியைக் கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்த்தை பாகு பதமின்றி காய்ச்சி வடித்து எடுக்க வேண்டும்

தயார் செய்து வைத்த பொடியில், இந்த பாகை சேர்த்து உருட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, மைதா அல்லது கான்ன்ஃப்ளோர் சேர்த்து கட்டியின்றி கரைத்துக் கொள்ளவும்.

கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து காய விடவும்.

உருட்டி வைத்துள்ள பூரணத்தை, கரைத்து வைத்த மாவில் நனைத்து, பொரித்து எடுத்தால், சுவையான முந்திரி கொத்து தயார்.

முந்திரிக் கொத்து என பெயர்தான், ஆனால், முந்திரி ஒரு ஆப்சனே.

பசங்க கேட் திறக்குற சத்தம் கேட்குது. ஃபிரஷ் ஆனதும் சுட சுட பரிமாறுங்க. 

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE