30 – 40 வயதில் என்ன செய்யக்கூடாது?
தன் வருங்காலத்தில் எந்த நோயால் பாதிக்கப்படப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள 30 வயது முதல் 40 வயது வரை உள்ளோர் அறிந்துகொள்ளலாம் என்கிறார் மருத்துவர் அருணாச்சலம்.
40க்கு பின் தான் வாழ்க்கை தொடங்குகிறது என்று பலரும் கூற கேள்விப்பட்டிருப்போம். ஒரு மனிதன் பிறந்தது முதல் பள்ளி, கல்லூரி படிப்பு முடித்து ஒரு தொழிலில் 10 முதல் 15 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று, பின் அந்த தொழிலை சிறப்பாக நடத்த கற்றுக் கொள்வார். அனுபவம் அதிகமாகும் எனவே அந்த தொழில் மூலம் வருமானமும் அதிகமாகும்.
ஆனால் அந்த 30 முதல் 40 வயதில் உள்ளோர் நோயையும் கூடவே சேர்த்து சம்பாதிக்கிறார் என்பதை ஆணித்தனமாக விளக்குகிறார் மருத்துவர் அருணாச்சலம். அது எப்படி என்பதை த காரிகையின் சிறப்புக் கட்டுரையில் காணலாம்.
30 வயதுக்கு மேல் ஒருவர் ஃப்ரீடயாபட்டிக் எனப்படும் சர்க்கரை நோய் தொடங்கும் காலகட்டத்தில் வாழக் கூடும். அதற்கு ஆறு மாதம் அவரது உடலில் சர்க்கரை நிலை எப்படி இருந்தது என்பதை ரத்த பரிசோதனையாக செய்து அது ஆறு புள்ளிகளுக்கு மேல் அதிகமாக இருந்தால் அவர் பிரீ டயாபட்டிக் என்னும் நிலையில் உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரை வியாதியானது கேட் வே ஆஃப் ஆல் டிசீசஸ் அதாவது அனைத்து வியாதிகளுக்கும் கதவை திறந்து விடும் ஒரு முக்கிய நோயாக கருதப்படுகிறது. எனவே சர்க்கரை பாதித்தவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ரத்த கொதிப்பால் அவதிப்படக்கூடும்.சர்க்கரை வியாதியும் ரத்த கொதிப்பும் சேர்ந்து இருதய நோய் மூளை பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தக் கூடும்.
உடல் முன்பு போல் செயல்பட விடாமல் தடுக்கும் காரணிகளாக இவை அமையும். எனவே முப்பது முதல் நாற்பது வயதில் உள்ளோர் செய்யும் உடல் ரீதியான தவறுகளைக் குறைக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த தவறாதது, உரிய நேரத்தில் உறங்காதது, உரிய நேரத்தில், ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடாதது, போதிய உடல் உழைப்பு இன்மை உள்ளிட்டவை பிற்காலத்தில் அவர்களுக்கு வியாதிகளை பரிசாக வழங்கும் என்றும் மருத்துவர் எச்சரிக்கிறார்.
30 வயதுக்கு மேல் போதிய இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்து உடலை ஆரோக்யமாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள எங்களது த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடருங்கள். வாழ்க்கை ஆரோக்யமானதாக அமைய த காரிகை வாழ்த்துகிறது!