உங்களை அறியாது மன நோய்க்கு ஆளாகும் அறிகுறிகள்!
உடலில் வரும் காய்ச்சல், தலைவலி போன்றவை தான் மனநோயும். ஆனால் சில சமயம் இது மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். நமக்குத் தெரியாமலே நமக்குள் மன நோய் வர வாய்ப்பு உண்டு. எனவே அதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து ஆரம்ப நிலைகளிலேயே குணப்படுத்துதல் அவசியமாகும். இல்லாவிட்டால் தற்கொலை பற்றி தவறான கண்ணோட்டம் கொண்டவர்கள் கூட அவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். மன நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் இதோ.
- நிலையற்ற மனம்
மன நோயின் முதல் அறிகுறி நாம் எடுத்த விஷயங்களில் ஒரு முடிவாகவும் தெளிவாகவும் இருக்காமல் திண்டாடுவது. வெற்றிகரமாக ஒரு விஷயத்தை செய்து முடிக்க முடியாமல் தவிப்பீர்கள். இதுவா? அதுவா? வேலையை விடலாமா? வேண்டாமா ? புது தொழிலை தொடங்கலாமா? வேண்டாமா? என பலரும் யோசிப்பது தான். ஆனால் இதனை நீங்கள் ஆண்டு கணக்கில் யோசித்துக் கொண்டே இருப்பீர்கள்.
- நம்பிக்கையின்மை
எந்த காரியம் செய்தாலும் உங்கள் திறமை மீதும் உங்கள் மீதும் உங்களுக்கே நம்பிக்கை இன்மை ஏற்படும். எதிர்மறை எண்ணங்களோடு போராடுவீர்கள். செய்யும் காரியங்களில் எல்லாம் தோல்வியை நோக்கி நகர்வீர்கள்.
- தனிமையில் விருப்பம்
நண்பர்கள், உறவினர்கள், கொண்டாட்டமான மனநிலை, சூழ்நிலை போன்றவற்றை எல்லாம் தவிர்ப்பீர்கள். நம்பிக்கை உடையய உறவுகளிடம் இருந்தும் விலகி இருப்பீர்கள். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் முடிந்த அளவு தனிமையில் நேரத்தை செலவிட விரும்புவீர்.
- தூக்கமின்மை
தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இரவில் இயல்பாகவே வரும் ஒரு நிலை. நாள் முழுக்க உழைத்து களைத்த உடலுக்கும் மூளைக்கும் ஓய்வு கொடுப்பது மிகவும் இயல்பான ஒன்று. ஆனால் அதில் அளவுக்கு அதிகமாக அர்த்தமற்ற சிந்தனைகள் இருப்பது தூக்கத்தை தள்ளிப் போடும்.
- அதிகளவு கோபம்
இதுவரை பொறுமையாய் பொறுத்துப் போய்க் கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் தற்போது கோபமாக எதிர்கொள்வீர்கள். மிகச் சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் அதிகமாக வரும். பின்பு அதுவே வழக்கமாகிவிடும். தங்களுக்கு மிகவும் சாதாரணமாக தெரிந்த விஷயங்கள் கூட தற்போது மிகப்பெரும் குற்றமாக தெரியக்கூடும்.
- சிந்தனைகள் பாதிப்பு
ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி சிந்திப்பதிலும், சிந்திப்பதை செயல்படுத்துவதிலும் சிரமம் ஏற்படும். சில சமயம் உங்களது அன்றாட வேலைகளை கூட செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.
- அர்த்தமற்ற அழுகை
எதற்காக அழுகிறீர்கள் என்று கூட தெரியாது. பல காரியங்களை ஒன்றாக நினைத்து அழுவீர்கள். காரணம் ஏதும் இன்றி கூட அழவேண்டும் என்றே தோன்றும். காரணம் கிடைக்காவிட்டால் ஏதேனும் ஒரு காரணத்தை எடுத்துக்கொண்டு அதைக் கூறி அழுவதும் வாடிக்கையாகிவிடும்.
- அதீத தலைவலி
வழக்கமான தலைவலிக்கு பதில் உங்கள் மனதை பாதிக்கும் மனக்கவலையால் அதீத தலைவலி அடிக்கடி ஏற்படலாம். அதிலும் குறிப்பாக அஜீரணம் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள், உடல் வலி போன்றவையும் ஏற்படலாம்.
- இறுதியாக தற்கொலை எண்ணம்
இதுதான் மனநோயின் உச்சகட்டம். மன நோயின் அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் அது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு இட்டுச் செல்லும் பலர் அந்த முயற்சியும் மேற்கொள்வர் விளையாட்டாக அல்லது சிம்பதி தேடுவதற்காக செய்யும் அத்தகைய முயற்சிகள் உண்மையிலேயே பலித்திடக்கூடும். இவ்வாறே பலரும் தற்கொலை மூலம் உயிரை மாய்த்து உள்ளனர். எனவே அது குறித்த எண்ணம் மேலோங்காவது தடுத்தலில் அறிகுறிகளை கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள் . .