அறிவாளிகளா! பெண் குழந்தையை பிறக்க பசங்க தான் காரணம் – மாமியாருக்கு குட்டு வைத்த நீதிபதி
அடப் போங்க, வரதட்சணையும் ஒழுங்கா தரல, அதோட ரெண்டு பொட்டப் புள்ளைய வேற பெத்துப் போட்டுட்டான்னு, மாமியார் கொடுமைப் படுத்தி தன்னோட மருமகள அந்நியாயமா கொன்ன வழக்குல தான் நீதிபதி இப்டி ஒரு தீர்ப்ப சொல்லிருக்காரு. அது என்ன வழக்கு? பின்னணி என்னனு த காரிகை உங்களுக்கு வழங்குது.
இந்த வழக்கில் கணவன் ஜாமீன் கோரிய மனுவை நிராகரித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.
அவரது கருத்து பின்வருமாறு, “வரதட்சணைகள் திருப்தி இல்லை என்ற வழக்குகள் பிற்போக்கு மனநிலையையும் இது போன்ற தொடர்ச்சியான நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டுகிறது. பெரும்பாலான திருமணமான பெண்கள் இந்த சவாலை எதிர்கொள்கின்றனர். மாமியார்களின் திருப்தியற்ற வரதட்சணைகள் வந்துகொண்டே இருக்கும். அதற்காக, பெண்களின் மதிப்பும் கண்ணியமும் அவர்கள் பெற்றோருடைய பூர்த்தி செய்யும் தகுதியை பொறுத்து மதிப்பிடக் கூடாது.”
“மகள் நன்றாக இருக்க வேண்டும், அவர் நல்லபடியாக வாழ வேண்டும், வசதியோடு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில பெற்றோர்கள் விரும்பி வரதட்சணையை அதிகமாக வழங்குவது, கவலை அளிக்கிறது.
பெண் தனது தாய் தந்தை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் ஆன வீட்டில் குடியேறிய பின்பு அவளுடைய அன்பையும் ஆதரவுகளும் தான் பெற வேண்டும். ஆனால் மாமியார் குடும்பத்தின் இடைவிடாத பேராசையால் புதிய மணமகள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது”
பெண் பெற்றெடுத்து, நேசித்த 2 மகள்களும் பெண் பாலினத்தவர் என்பதால் அதற்கு அவள் மட்டுமே பொறுப்பு என்பது போல் அவளை துன்புறுத்துவதற்கும் சித்ரவதைக்கு உள்ளாக்குவதற்கும் வரதட்சணை தொடர்பான குற்றங்கள் உள்ளன. இது பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து சித்திரவதை செய்து துன்புறுத்தி அதன் காரணமாக உயிரை விடச் செய்யும் கொடூரமாகும்.”
ஆனால் இந்த எண்ணத்தை மரபணு அறிவியல் ஆனது முற்றிலும் புறக்கணிக்கிறது. ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை X மற்றும் Y குரோமோசோம்கள் தான் நிர்ணயம் செய்யும்.
பெண்களிடம் 2 X க்ரோமோசங்கள் மட்டுமே உள்ளன. ஆண்களிடம் தான் X மற்றும் Y குரோமோசோம் உள்ளன.
பெண்ணின் கருமுட்டை X குரோமோசோம் விந்தணுவுடன் இணைகிறதா அல்லது Y குரோமோசோமின் விந்தணுவில் இணைகிறதா என்பதை பொறுத்து பெண் அல்லது ஆண் குழந்தை பிறக்கிறது.
ஆனால் குடும்ப வம்சாவழியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பெண் பிள்ளைகளை பெற்றெடுத்து விட்டாள் என பெண்களை மட்டும் குற்றம் சாட்டி துன்புறுத்தி நச்சரித்து தற்கொலை அல்லது வரதட்சணை மரணங்களை நிகழச் செய்து விடுகின்றன. இதுபோன்ற பல வழக்குகளை நீதிமன்றம் கையாண்டுள்ளது.
அப்படிப்பட்டவர்களுக்கு “குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது மருமகள் அல்ல தனது மகனின் குரோமோசோம்கள்” என்பதை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
இந்த தீர்ப்பு ஒரு அறிவொளியின் பிறப்பிடமாக இருக்க வேண்டும். இது போன்ற குற்றங்களை செய்பவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். சட்டக் கொள்கைகள் மூலம் அறிவியல் கொள்கைகளை பயன்படுத்தி திருமணமான அப்பாவி பெண்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்” என ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி கருத்து கூறியுள்ளார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.