படிடா பரமா. . படி. . மஞ்சப்பை கேன்சரை எப்படி தவிர்க்கும் தெரியுமா?
பேக்கேஜிங் செய்யும் காகிதங்களால் ஏற்படும் புற்றுநோய் மக்கள் மத்தியில் பரவும் வாய்ப்பு மிக மிக அதிகரித்து இருப்பதாக ஒரு அதிர்ச்சிகர ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அது உடலில் நுழைந்துவிட்டால் எப்போதும் தங்கியிருக்கும் ரசாயனமாக மாறிவிடுகிறது. இதனால் எளிதில் குணப்படுத்த முடியாத கேன்சரும் வருகிறது.
கோட்டிங் பேப்பர், பேக்கேஜ் செய்யும் பேப்பர், ஃபாஸ்ட் ஃபுட், பேக்கரி கூட்ஸ், அலுமினியம் ஃபாய்ல் போன்றவற்றின் விளைவைத்தான் பார்க்கிறோம்.
என்ன ஆய்வு?
“யுனிவர்சிடி ஆஃப் சதர்ன் கலிஃபோர்னியா” இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையாக அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறை 2005 முதல் 2018 வரை எடுக்கப்பட்ட தரவுகள் உள்ளன. தற்போதும் நடைபெற்று வரும் இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் Journal of Exposure Science and Environmental Epidemiology என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
ஆபத்தான ரசாயனங்கள்
per- and polyfluoroalkyl substances (PFAS) என்ற ரசாயனம் கேன்சர் உருவாக்கும் வாய்ப்பை அதிகரித்து உள்ளது. குறிப்பாக இது ஹார்மோனலி டிரைவன் கேன்சராக அதாவது ஹார்மோன்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதால் ஏற்படும் புற்றுநோயாக உருவெடுக்கிறது. இந்த ரசாயனம், நீர், உணவு, காற்று, சூழலியல் போன்ற அனைத்திலும் ஊடுருவியுள்ளது. கிட்டத்தட்ட 97% அமெரிக்கர்களின் ரத்தத்தில் PFAS என்ற ரசாயனம் Forever Chemical-ஆக உள்ளது என கண்பிடிக்கப்பட்டுள்ளது.
கேன்சர் நோய்
20 வயதுக்கும் மேற்பட்ட 48712 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பல காரணிகள் வேறுபாடும் இருந்தன.
வயது
பாலினம்
நிறம் அல்லது நாடு சார்ந்த இனம்
போதை பயன்பாடு (சிகரெட், மது, இதர)
ஏழ்மை
வருமான விகிதம்
கல்வி
பாடி மாஸ் இன்டக்ஸ்
கிரியேடினைன்
14 ஆண்டுகளில் ரத்தம் மற்றும் சிறுநீரின் அளவு போதிய இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டு வந்தது. அதில் 16,696 பேரில் 8010 ஆண்கள். 8686 பேர் பெண்கள். அவர்களில் ரத்தத்தில் ஃபெனால் மற்றும் பெராபன் ரசாயனங்கள் இருந்த 5084 ஆண்களுக்கும் 5344 பெண்களுக்கும் புற்றுநோய் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு வகையான கேன்சர் பாதித்தது தெரியவந்துள்ளது.
ஆண்களுக்கு வந்த கேன்சர் ஃபெனோல் கெமிக்கல் PFAS கெமிக்கல்
புரோஸ்டேட் கேன்சர் 104 199
டெஸ்டிகுலர் கேன்சர் 7 8
தைராய்டு 3 7
மெலோனமா 20 52
பெண்களுக்கு வந்த கேன்சர் ஃபெனோல் கெமிக்கல் PFAS கெமிக்கல்
பிரெஸ்ட் கேன்சர் 114 178
ஓவரியன் கேன்சர் 20 35
யூடரின் கேன்சர் 37 51
தைராய்டு 9 28
மெலோனமா 27 39
தீர்வு மஞ்சப்பை
இந்த ரசாயனங்கள் உணவு பேக்கேஜிங் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றில் உள்ளன. சூழலியலில் நீர், காற்று ஆகியவற்றில் இருக்கும் இந்த பிளாஸ்டிக் ரக கெமிக்கல் உடலில் ரத்தத்தில் கலந்து ஃபாரெவர் கெமிக்கலாக மாறி புற்றுநோயை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் புற்றுநோயானது எளிதில் குணப்படுத்தமுடியாததாகவும் மாறிவிடுகிறது. முன்பெல்லாம் பிளாஸ்டிக், பாலிதீன் கவர்களுக்கு பதில் மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு லூசில் பொருட்கள் வாங்குவர். அதாவது உபரியில் வாங்கிக் கொண்டு செல்வார்கள். தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதால்தான் இந்தப் புற்றுநோய் பரவுவதாகவும் இதனை அரசு கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.