தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் மம்மூட்டி. ரஜினி கமல் போல மலையாள திரை உலகில் ஒரு அந்தஸ்தமிக்க உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர். இவர் தனது வாழ்வில் நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே 4தேசிய விருதுகளை வென்ற மம்முட்டி அதைவிட தான் ஒரு 2 ரூபாய் நோட்டை பொக்கிஷமாக மதிப்பதாக கூறியுள்ளார். அப்படி என்னதான் அந்த 2 ரூபாய் நோட்டு ஸ்பெஷல் ஆனது? என்பதை அவர் விவரித்த கதை வழியே தற்போது பார்க்கலாம்.

மமதை உடைத்த ரூ.2 நோட்டு – மம்முட்டியின் பொக்கிஷம்

தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் மம்மூட்டி. ரஜினி கமல் போல மலையாள திரை உலகில் ஒரு அந்தஸ்தமிக்க உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர். இவர் தனது வாழ்வில் நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே 4தேசிய விருதுகளை வென்ற மம்முட்டி அதைவிட தான் ஒரு 2 ரூபாய் நோட்டை பொக்கிஷமாக மதிப்பதாக கூறியுள்ளார். அப்படி என்னதான் அந்த 2 ரூபாய் நோட்டு ஸ்பெஷல் ஆனது? என்பதை அவர் விவரித்த கதை வழியே தற்போது பார்க்கலாம்.

மம்மூட்டி பகிர்ந்த கதை

“ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நான் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து மஞ்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தேன். நள்ளிரவு கடந்து விட்டது சாலை கிளியராக இருந்ததாலும், அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாததாலும், புத்தம் புதிதாக வாங்கிய காரை ஓட்டிப் பார்க்கும் திரில்லிலும் நான் வேகமாக சென்று கொண்டு இருந்தேன். ஒரு சிறிய ஜங்ஷனை கடக்க முயன்ற போது திடீரென ஒரு முதியவர் அவர் வாகனத்தில் வந்து விழும் அளவுக்கு உள்ளே வந்து கையை அசத்து நிறுத்த முயன்றார்.

நான் இதை சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அதுவும் இந்த அதிகாலை வேளையில் யார் இவர்? எதற்காக தன்னை வழி மறுக்கிறார்? என யோசிக்கும் முன்பாக அவர் அருகே வந்துவிட்டதால், திடீரென காரை இடது வலதாக திருப்பி அவரை இடிக்காமல் தள்ளி நிறுத்தினேன். பின் பின்னோக்கி வந்து காரை விட்டு இறங்கி அவரைத் திட்டும் கோபத்தில் சென்றேன். பிரேக் பிடிக்காவிட்டால் விபத்து நடந்து இருக்கும் என விவரிக்க முற்பட்டேன். ஆனால் அவரோ பாலத்தின் ஓரமாக வலியில் படுத்திருந்த ஒரு இளம் பெண்ணை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தார்.

பின்பு பேசிய அந்த முதியவர் என்னிடம் வந்து “இவ மாசமா இருக்கா, வலி வந்துருச்சுன்னு நினைக்கிறேன். ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். கொஞ்சம் உதவி பண்ணுங்க. புண்ணியமா போகும்” என கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார். அவர் கண்களில் பயம் தெரிந்தது.

வெகு நேரமாக காத்திருந்தும் எந்த வாகனமும் உதவிக்கு வரவில்லை என முதியவர் சொன்னதை கேட்ட நான் அவசர அவசரமாக அவர்கள் இருவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டேன்.

அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு 70 வயது இருக்கும் அந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும். வண்டியில் போகும் போது அது தனது பேத்தி என முதியவர் கூறினார்.

மாஞ்சேரி மருத்துவமனைக்கு சென்றதும் எனது கார் கிரீச்சிடும் சத்தம் கேட்டு செவிலியர்கள் ஓடிவந்தனர். அவசர அவசரமாக அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்றனர்.

நள்ளிரவு நேரத்தில் நடந்த கலவரத்தாலும் இருட்டாலும் யாரும் என்னை கவனிக்கவில்லை. அந்த முதியவர் நான் கிளம்பும்போது என்னை நோக்கி ஓடி வந்தார்.

ரொம்ப நன்றிப்பா கடவுள் புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா நடந்தது. உங்க பேரு என்ன? என கேட்டார். நான் மம்முட்டி என்றேன். ஆனால் இருந்த போதும் அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. என்னை எங்கேயோ பார்த்தது போல் இருப்பதாக கூட அவர் கூறவில்லை.

தான் ஒரு கூலி தொழிலாளி என்றும் தனது பேத்திக்கு பிரசவம் ஆக உதவியதற்கு மிக்க நன்றி என்றும் கூறினார். வேட்டியில் முடிந்து வைத்த கிழிந்த 2 ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்.

‘இந்தா தம்பி இத சந்தோசமா வச்சுக்க, ஏதாவது வாங்கி சாப்பிடு’ என கூறி கையில் திணித்துவிட்டு அவசர அவசரமாக அவர் மருத்துவமனைக்குள் சென்று விட்டார்.

அது ஓட்டையாகிப் போன ரூ.2 நோட்டு. எதற்கும் பயன் இருக்காது ஆனால் சில விஷயங்கள் அனைத்தையும் விட மதிப்பு மிக்கது என்பதை அந்த நோட்டை பார்த்து நான் உணர்ந்து கொண்டேன்.

எத்தனை ரூபாய் நோட்டு என்பதில் மதிப்பு இல்லை. யார்? எந்த சூழலில்? அதை மனமுவந்து கொடுக்கிறார்கள்? என்பது தான் மதிப்பு. நேர்மையான இதயம் கொண்ட அந்த தாத்தாவைப் போன்ற ஒருவரை பார்த்தது மகிழ்ச்சி.”

தான் ஒரு நடிகர் என்ற மமுதே அப்போது உடைந்து விட்டதாகவும் தன்னை அடையாளம் காண விட்டாலும் ஒரு மனிதனாக தான் ஜெயித்து விட்டதை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதை மையமாகக் கொண்டுதான் ‘ஓர்ம’ அதாவது ஞாபகங்கள் என்ற கதை மல்பெரி பப்ளிகேஷன் மூலம் வெளியிடப்பட்டது.

மம்முட்டியின் அந்த 2 ரூபாய் நோட்டு கதை 2018ல் நடந்தாலும் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

Actor Mammootty

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE