அடித்து நடிக்க வைத்த பாலா? பொறுமையிழந்தனரா பிரபலங்கள்? உண்மை என்ன?
பாலாவின் டைரக்சன் என்றாலே சற்று முரட்டுத் தனமாக இருக்கும் என சில சர்ச்சைகள் எழுந்தன. அவரிடம் நடித்து விட்டால் யாரிடம் வேண்டுமானாலும் நடித்துவிடலாம். ஒரு ஷாட் சரியாக வரும்வரை விடாது வெறித்தனமாக நடிக்க வைப்பார். நடிகர்களிடம் கருணைகாட்ட மாட்டார். மிகக் கடுமையான காட்சிகளை, கஷ்டப்பட்டு, பிறரையும் கஷ்டப்படுத்தி படமாக்குவார். என பல கலவையான விமர்சனங்கள் அவர் மீது இருக்கத்தான் செய்கின்றன.
அதேசமயம் இயக்குநர் பாலாவிடம் ஒரு படமாவது நடித்து தனக்குள் இருக்கும் நடிப்பு அரக்கனை வெளியே கொண்டுவந்து ஜெயித்துக் காட்ட வேண்டும் என அவரது இயக்கத்துக்கு ஏங்கும் நடிகர்களும் உண்டு.
நடிகர் சூர்யா கூட இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் பிதாமகனில் நடித்திருந்தார். அப்போதே அவரது இயக்கும் முறையை நடிகர் சூர்யா அறிந்திருக்கிறார். இருப்பினும், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் மீண்டும் வணங்கான் படத்தில் நடிக்க சம்மதித்து படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால், வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். இதையடுத்து தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டியும், மலையாள நடிகையான மமிதா பைஜூவும் சேர்ந்தே இப்படத்தில் இருந்து விலகினர்.
இந்தநிலையில் தான், நடிகர் அருண் விஜய்யை வைத்து பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ரோஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் டீசர்கூட வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
ஆனால், தற்போது படத்தின் சர்ச்சை எழத் தொடங்கியுள்ளது. வணங்கான் படத்துக்கு பிரச்சனை கொடுக்கும் வகையில் மமிதா பைஜூ பேட்டியளித்துள்ளார். இந்தப்பஞ்சாயத்தானது தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியாக நடிக்கவில்லை என்றால் தன்னை பின்னாடி இருந்து அடிப்பார் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி செய்தி சேனல் ஒன்று மமிதா பைஜுவிடம் விளக்கம் கேட்டது. அப்போது பேசிய அவர், “பாலா சார் துன்புறுத்தவில்லை, ஒரு வருடம் அவருடன் இணைந்து பணியாற்றினேன். எனது பெரிய பேட்டியில் ஒரு சின்ன பிட்டை கட் செய்து தப்பா புரமோட் பண்ணிட்டாங்க, அவர்கள் கூறிய விஷயத்தை நான் முழுமையாக மறுக்கிறேன் எனவுக் கூறியிருக்கிறார்.
அப்படியிருந்தால் ஏன் அந்தப் படத்தில் இருந்து விலகுனீர்கள்? என அந்த நிருபரும் மமிதாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கும் விளக்கமளித்த அவர், “சூர்யா சார் படத்தில் இருந்து விலகிய நிலையில், மேலும், 6 மாதம் கால தாமதம் எடுக்கும் படம் புதிதாக உருவாக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், மலையாளத்தில் எனக்கு இன்னொரு பட கமிட்மென்ட் இருந்தது. எனவேதான், வெளியேறி விட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.