ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த நாய்களும் ஒவ்வொரு குணம் கொண்டவை. ஒரு சில நாய் இனங்கள் ஆக்ரோஷமானவை. சிலசமயம் உரிமையாளர் என்றும் பாராமல் கடித்துக் குதறி உயிரையே குடித்துவிடும். ஒரு சில இன நாய்கள் அதிக நினைவாற்றல் கொண்டவை. எத்தனை ஆண்டு கழித்து தனது முந்தைய உரிமையாளரைக் கண்டாலும் அது துள்ளிக் குதித்து வாலாட்டி வந்து தொற்றிக் கொள்ளும்.

ஒரு சில நாய் இனங்கள், அதிக நன்றி கொண்டவை. ஒரு வேளை அன்போடு உணவளித்தாலும் வீடு வரை பாதுகாக்கத் தேடி வந்து விடும். எந்ததெந்த நாய் இனங்களை வாங்கி வளர்த்தால் அது நம்மீது அன்கன்டிஷனல் அன்பை வெளிப்படுத்தும் என்பதை த காரிகையின் சிறப்புத் தொகுப்பைத் தற்போது காணலாம்.

லேப்ரடார் ரிட்ரீவர்

லேப்ரடார் ரிட்ரீவர் ரக நாய்கள் எப்போதும் சுறுசுறுப்பானவை. உலகம் முழுவதுமே இது நன்கு பிரபலமான இனம். இது நட்பாகவும் பாசமாகவும் இருக்கும். அதிக புத்திசாலித்தனமும், விஸ்வாசமும் லேப்ரடார் இன நாய்களுக்கு இருக்கும். இந்த ரக நாய்களுக்கு அதிகம் பயிற்சி அளிக்க முடிக்கும். எளிதாகக் கற்றுக் கொள்ளவும் செய்யும். குடும்பத்துக்குள்ளும் அனைத்து நபர்களிடத்திலும் செல்லம் கொஞ்சி விளையாடும்.

கோல்டன் ரிட்ரீவர்

கோல்டன் ரிட்ரீவர் இன நாய்கள் அதிகம் நட்புடன் பழகும். மென்மையாக நடந்து கொள்ளும். முதலாளியிடம் பக்தியோடு நடந்து கொள்ளக் கூடியவை. அன்புகாட்டியே ஆளை மயக்கும் வேலைத்தனமும், சோகமாக முகத்தைக் காட்டி காரியம் சாதிக்கும் வேலைத்தனமும் இதனிடம் அதிகம் இருக்கும். மிகவும் பாசமான இன நாய்களின் இதுவும் ஒன்று.

பீகிள்

பீகிள் இன நாய்கள் மிகவும் சிறிய அல்லது நடுத்தர உயரம் கொண்டவை. மனிதர்களிடம் எளிதில் பழகும் மனப்பாங்கு கொண்டவை. தன்னைச் சுற்றி வசிப்போரிடம் மென்மையாகப் பழகும். தனது உரிமையாளர்களிடம் நன்கு பழகி அன்பைப் பெறும். விளையாடினால் நன்கு கம்பெனி கொடுக்கும்.

த இந்தியன் பரியா

இந்தியன் பரியா அல்லது இந்திய ரக நாய்கள், நாட்டு இனமாகும். மிகவும் விஸ்வாசமாக இருக்கும். உரிமையாளரை நோக்கி குரலை உயர்த்திப் பேசினாலே, கடிக்கப் பாய்ந்துவிடும். சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும். சுதந்திரமாகச் சுற்றினாலும், அது வளர்க்கும் உரிமையாளரிக் குடும்பத்தைச் சார்ந்து இருக்கும்.

காக்கர் ஸ்பேனியல்

பாசமாகவும், மென்மையாகவும் பழக்கும் நாய் இனங்களில் மற்றொன்றுதான் இந்த காக்கர் ஸ்பேனியல். தன்னை வளர்க்கும் உரிமையாரிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் நன்கு பழகக் கூடியது. குழந்தைகளிடம் விளையாடிட இந்த இனத்தைச் சேர்ந்த நாய்கள் அதிகம் விரும்பும்.

என்னதான் ஒரு நாயின் இனம் இதுவாக இருக்கலாம் என கணித்தாலும், ஒவ்வொரு நாய்களும் ஒவ்வொரு குணம் கொண்டவை. பயிற்சி அளித்தல், பழகுதல் உள்ளிட்டவை வேறுபடும். அதிக விலையுள்ள நாய்களை வாங்குவதைக் காட்டிலும், நாய்களைத் தத்தெடுப்பதும் நல்லதுதான். ஒரு நாயை வாங்கும்போதோ, அதைத் தத்தெடுக்கும் போதோ, தங்களால் 10 முதல் 15 ஆண்டுகள் அதனைத் தொடர்ந்து வளர்க்க முடியுமா? என்பதைக் காண வேண்டும். இல்லாவிட்டால், ஆசைக்கு வாங்கி வளர்த்துவிட்டு பின்னர் விற்பது நாய்க்கும் சரி, பழகியோருக்கும் சரி. மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்திவிடும். நாய்களைப் பராமரிக்காது கைவிடுவதும் கஷ்டம் தான்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE