பிக் பாஸில் எப்படி முதல் சீசனில் ஓவியாவும் ஆரவும் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருந்தார்களோ, அதே போல் லாஸ்லியாவும் கவினும் காதலிப்பதாக பல செய்திகள் வந்தன. இதனை இருவரும் ஒப்புக்கொண்டும் சமூக வலைதளங்களில் சில பேட்டிகள் கொடுத்திருந்தனர். ஆனால் அப்போதே பிரேக்கப்பும் நடந்திருந்தது.

குடும்ப சூழல் காரணமாக லாஸ்லியாவைவை திருமணம் செய்து கொள்ள முடியாத ஒரு சூழல் இருந்ததாக சொல்லப்பட்டது.

லாஸ்லியா சார்பில் பலரும் பிரேக்கப் பாடல்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்து அதகளப் படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கவினுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

இது பற்றி லாஸ்லியாவிடம் இருந்து எந்த ஒரு கருத்துமே வெளிப்படாத நிலையில் இருந்தது. இந்த நிலையில் தான் மனம் திறந்து பேசி உள்ளார் லாஸ்லியா.

“பிரேக்கப் ஆனா, சாதாரண மனுஷனுக்கு எப்படி வலிக்குமோ அதே மாதிரி தான் எனக்கும். அந்த சமயத்துல நாம ஒரு விதமான மனநிலையில் இருப்போம். அந்த மனநிலையை நான் கடந்து வந்துட்டேன். இங்க யாருமே யாருக்கும் அட்வைஸ் பண்ண முடியாது. என்ன காரணம் அப்படின்னா நான் பார்த்த விஷயத்தை அவர்கள் அவங்களோட வாழ்க்கையில பார்த்திருக்க மாட்டாங்க.”

“அவங்க வேறு வகையான விஷயத்தை பார்த்திருப்பாங்க. அப்படி இருக்கும்போது என்னோட வலிதான் மிகவும் பெருசு அப்படின்னு சொல்லி நினைச்சுட்டு நான் இருப்பேன். ஆனா இன்னொருத்தங்களோட கதையை கேட்கும் போது அந்த வலி அதைவிட பெருசா இருக்கும்.“

“ஒரு பிரேக் அப் நடந்துருச்சு அப்படிங்கிறதுக்காக அதிலேயே உட்கார்ந்துட்டு இருக்க முடியாதுல்ல”

“அவருக்கு திருமணமானதை பார்த்து எனக்கு எதுவுமே தோணல. அவரோட வாழ்க்கையை பார்த்துட்டு சூப்பரா போயிட்டு இருக்காரு. அதுல நான் என்ன கமெண்ட் சொல்ல முடியும்?”

“கவின் ஓட பர்சனல் வாழ்க்கையும் சரி தொழில் வாழ்க்கையும் சரி. ரொம்பவே நல்லா போய்கிட்டு இருக்கு. அதை பார்க்கும்போது உண்மையிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்படி இருக்கும்போது இதுல கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லை.”

“நாங்க இப்படி இருக்கும்போது, யாரோ ஒரு மூணாவது நபர் இருவரையும் கனெக்ட் பண்ணி பேசினா அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? எதுவுமே பண்ண முடியாது இல்ல.”

“கஷ்டமா தான் இருக்கும். ஆனா நம்ம கடந்து போய் தான் ஆகணும். நமக்காக யாரும் இங்க காத்துட்டு இருக்க மாட்டாங்க. நமக்காக நேரமும் கூட காத்திருக்காது. So, move on”

இப்படி தன்னோட வாழ்க்கை பத்தின அனுபவத்தை தன்னோட ரசிகர்களுக்கும் ஒரு பாடமா குட்டி அட்வைஸ் மூலம் கொடுத்து இருக்காங்க லாஸ்லியா.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE