“டாலி” வெப்சீரிஸ்- சுஷ்மிதா சென் மிரட்டும் நடிப்பு – என்ன கதை?
இந்தியாவின் முதல் திருநங்கை தாய் கௌரி ஷவான்த். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து டாலி என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் உருவாகிறது. அதில் சுஷ்மிதா சென் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் யூடியூப்பில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் இன் கவனத்தை ஈர்த்துள்ளதோடு பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
யார் இந்த கௌரி?
1980 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் புனேவில் பிறந்தார். இவரது 7 வயதில் தாய் இறந்து விட, சகோதரியின் வளர்ப்பில் வாழ்ந்தார். இவரது தந்தை புனேவில் ஒரு காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தார்.
தந்தையின் வெறுப்பு
பள்ளிக்காலங்களில் ஒரு முறை கௌரியின் தந்தையை அழைத்த பள்ளி பிரின்ஸ்பல் அவன் ஒரு பெண்ணை போல தன்னை பாவித்து நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார். இதைக்கேட்ட தந்தை மிகவும் ஆத்திரமடைந்தார். அன்று முதல் கௌரியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். தந்தை வீட்டுக்கு வரும்போது எல்லாம் கௌரியும் ஒரு தனி அறைக்குள் புகுந்து தன் முகம் காட்டாமல் ஒளிந்து கொள்வாராம். இப்படியே காலம் சென்று கொண்டிருக்கையில் தனது டீ ஷர்ட்டுக்குள் பெண்கள் அணியும் உள்ளாடை அணிந்திருந்ததை கண்டு குடும்பத்தினர் அவரை வன்மையாக கண்டித்துள்ளனர்.
வீட்டை விட்டு ஓட்டம்
தனது 17 வயதில் வீட்டை விட்டு வெறும் 60 ரூபாயோடு வெளியேறினார் கௌரி. மும்பைக்கு செல்லும் ரயிலில் ஏறி சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றார். அங்கு மதியம் அளித்த இரண்டு லட்டுக்களை உணவாக எடுத்துக் கொண்டு வேலை தேடினார். ஆனால் யாரும் வேலை கொடுக்கவில்லை. பாலியல் தொழில் செய்யும் தனது நண்பரிடம் சென்று 3 நாட்கள் அங்கு இருந்தார். தான் அழகாக இல்லை என்பதால் பாலியல் தொழிலும் ஈடுபட முடியாது என்று புலம்பி கொண்டிருக்கும் போது தான் இந்தியாவின் மிகப் பழமையான LGBTQ அமைப்பின் டிரஸ்டல் இணைந்தார்.
தேடிவந்த மதிப்பு
ஒரு திருநங்கையாக தன்னை யாரும் மதிக்காத நிலையில் 8 வயது பெண் குழந்தையை கௌரி தத்தெடுத்தார். தந்தையை இழந்த சிறுமி, தாயை எய்ட்ஸ் நோய்க்கு பறிகொடுத்த அவல நிலையும் கண்டு இந்த முடிவை அவர் மேற்கொண்டார். ” முதலில் ஓர் இரண்டு நாட்களில் அவரது குடும்பத்தினர்களோ, உறவினர்களோ யாரேனும் வந்து அவரை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே வீட்டுக்கு அழைத்து வந்தேன். ஆனால் யாருமே வராததால் மனம் நொந்து போனேன்” என்கிறார் கௌரி.
வளர்க்க முடிவு
ஒரு இரவில் ஒரு தாயினைப் போல தன்னை அணைத்து சிறுமி உறங்குவதை கண்டு அழுதார் கௌரி. அவர் தனக்கென யாரும் இல்லை என்றும் குழந்தைக்கும் யாரும் இல்லாததால் அவரை தத்தெடுத்து படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கவும் முடிவு எடுத்தார்.
ஒரு குழந்தையை தத்தெடுத்த பின்பு தான் அவருக்கு சமூகத்தில் மதிப்பு தேடி வந்தது. இந்தியாவின் முதல் பெண் திருநங்கை தாயென இவர் என அழைக்கப்பட்டார்.
படிப்பு
தான் தத்து எடுத்த பெண் குழந்தைக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசையையும் நிறைவேற்றும் முடிவெடுத்தார். ஆனால் அவர் வழக்கறிஞராக மாறி திருநங்கைகளுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்க விரும்பினார்.
முதல் திருநங்கை
முதல் திருநங்கை தாய் என்ற பட்டம் மட்டும் இன்றி, அவருக்கு முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தில் மனத்தாக்கல் செய்த திருநங்கை என்ற பெயரும் கிடைத்தது. இதன் மூலம் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் உருவானது. இதை அடுத்து வீட்டை விட்டு ஓடி வந்த திருநங்கைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை இருக்காது என்பதால், அவர்களும் ஆதார் பெற்றுத் தர கோரியின் சட்டப்போராட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருநங்கைகளுக்கு உதவி
திருநங்கைகளுக்கு உதவி செய்யும் அமைப்பில் சுயம்பாய் உருவெடுத்த கௌரியை பற்றிய கதையை தான் “டாலி” வெப் சீரிஸில் சுஷ்மிதா சென் நடித்துள்ளார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்