முற்றிலும் காங்கிரஸ் பின்னணியில் இருந்து பாஜகவுக்கு வந்த போதும் பாஜகவில் தலைவரான ஒரே தமிழ்ப்பெண் என்ற புகழைப் பெற்றவர் தமிழிசை சௌந்தரராஜன்.

இவரது தந்தை குமரி அனந்தன். தாய் கிருஷ்ண குமாரி. இவர் குமரி மாவட்டத்தில் 1961ல் பிறந்தார். தற்போது 62 வயதாகும் இவர் தெலுங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பணியாற்றியவர். தற்போது அரசியலில் களம் கண்டு முழுமையாக தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்வதற்காக அந்த பதவியை துறந்து விட்டு தென் சென்னை பகுதியில் திமுகவின் தமிழச்சி தங்க பாண்டியனை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் களம் கண்டு வருகிறார்.

தமிழிசையும் தமிழச்சியும் களத்தில் தான் எதிரெதிராக நின்று போட்டியிடுகிறார்கள். தவிர நேரில் பார்க்கும்போது ஒருவருக்கு ஒருவர் தோழமையோடு அணைத்துக் கொண்டு பாசம் செலுத்தி வருகின்றனர்.

தமிழிசையும் தேர்தல் களமும்

2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர் தமிழிசை சவுந்தரராஜன்.

2011 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களிலும் இவர் தோல்வியை தழுவினார். இருந்த போதும் பாஜகவின் தேசிய பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்து ஆளுநர் பதவிகளிலும் இருந்த அவர் தற்போது மீண்டும் களம் கண்டு வருகிறார்.

இவர் ஏற்கனவே அளித்த பேட்டியில், அரசியல் ஆண்களுக்கான உலகம் என்ற போதும் பெண்கள் அதில் வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் அவரது சித்தப்பா வசந்தகுமார் ஆகிய இருவரும் தீவிர காங்கிரஸ் பற்றாளர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர்களாகவும் இருந்தனர். ஆனால் அந்த கட்சி இந்தியாவை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லவில்லை என்றும் பிற நாடுகளுடன் ஒப்பீட்டு அளவில் இந்தியா இன்னும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற வேகம் தனது எதிர்பார்ப்பாக இருந்த நிலையில் அதனை அக் கட்சி பூர்த்தி செய்யவில்லை என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதற்கு தந்தையிடமும் குறிப்பாக தனது சித்தப்பா வசந்தகுமாரிடம் அதிக எதிர்ப்பு கிளம்பியதாகவும் எதிர் கட்சியாக சித்தப்பா வசந்தகுமார் தன்னை தொலைபேசியில் அழைத்து வசைபாடியதையும் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார்.

இருப்பினும் இவரது தாயும் மருத்துவரான இவரது கணவரும் தரும் உத்வேகத்தில் இவர் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பட்டம் பெற்ற தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மருத்துவர் சௌந்தரராஜனுக்கு சுகநாதன் என்ற மகன் உள்ளார்.

தொழில் நகரமான தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE