லோடிங் டோஸ் 3 மாத்திரை போதும். ஹார்ட் அட்டாக் பயம் இல்லாமல் வாழலாம் – அமைச்சர் மா.சு.

தற்போதெல்லாம் இளம் வயதில் கூட மாரடைப்பு என மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கோவை தனியார் மருத்துவமனையில் 30 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் விமான நிலையத்தில் டாக்டர் பக்தவச்சலத்தை சந்தித்தேன். அவர் தன் பாக்கெட்டில் லோடிங் டோஸ் என சொல்லக்கூடிய 3 வகையான மாத்திரைகள் 14 வைத்திருந்தார்.

யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக இந்த 3 வகையான பாத்திரங்களை போட்டுக் கொண்டால் கோல்டன் ஹவர் என சொல்லக்கூடிய பொன்னான நேரத்தில் நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்படும் என்றும் இதையடுத்து அவர் இதயத்துக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவமனைக்கு சென்று எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருத்துவர் பக்தவச்சலம் தெரிவித்திருந்தார். “

“இது என் மனதில் ஆழமாக பதிந்திருந்தால் கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழக அரசு சார்பில் இதயம் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் இருக்கும் 813 துணை சுகாதார நிலையங்கள், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 10,991 மருத்துவமனைகளிலும் இந்த லோடிங் டோஸ் கிடைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மலைப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளுக்கும் இந்த லோடிங் டோஸ் கொடுக்கப்படுகிறது.

அருகில் உள்ள மருத்துவமனைகள் இந்த லோடிங் டோஸ் கொடுக்கப்பட்ட பின்பு பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு அவர்களை பாதுகாப்பாக உயிரை காப்பாற்றி அனுப்பி வைக்க இந்த லோடிங் டோஸ் இதயம் காப்போம் திட்டம் மூலம் உதவுகிறது.

இந்த திட்டம் தொடங்கி ஓராண்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 7412 பேர், துணை சுகாதார நிலையங்களில் 484 பேர் லோடிங் டோஸ் பயன்படுத்தி உள்ளனர்.

Atrovastatin 80 mg
Clopitab 150 mg
Disprin 350 mg

ஆகிய மாத்திரைகளை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு வந்த 5 முதல் 10 நிமிடங்களில் இந்த மருந்தை கொடுத்து உயிரை காப்பாற்றலாம். இதன் விலை ரூபாய் 100 மட்டுமே என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Facebook
Instagram
YOUTUBE