விமானத்தில் போறீங்களா? இனி இதை பண்ணாதீங்க. .
விமான பயணம் என்பது சாதாரணமாக பேருந்திலோ, ரயிலிலோ பயணிப்பது போல் அல்ல. நாம் வழக்கமாக வாழும் சீதோஷ்ண நிலை, பூமி இவை அனைத்தையும் விட்டு வானில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து பயணிக்கும் ஒன்றாகும். எனவே வானில் பறக்கும் போது, அசௌகரித்தை உணராமல் இருக்க ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி விமான பயணம் செய்பவர்கள் கூட இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே “The Karigai“-யின் இந்த தகவலை பலருக்கும் பகிருங்கள்.
கொரோனா பெருந்தொற்று காலத்தை தவிர வேறு நாட்களில் விமான பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கவில்லை. பெருந்தொற்று பரவல் காலத்திலும் கூட பிபி என்னும் படும் பர்சனல் ப்ரொடக்ஷன் ஆடை அணிவது அவர்களின் பாதுகாப்புக்காக என அறிவுறுத்தப்பட்டது. மற்றபடி விமானத்தில் பயணிக்கும் போது, தனி ஆடை கட்டுப்பாடு ஏதுமில்லை. ஆனால் ஒரு சில ஆடைகள் உங்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தக்கூடும். அவை பின்வருமாறு
- காண்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டாம்
விமானம் ஆனது மிக அதிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும். அப்போது கேபினுக்குள் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அந்த காற்றோட்டத்தில், காண்டாக்ட் லென்ஸ் அணியும்போது அது கண்ணில் உருகுவதை எரிச்சலை ஏற்படுத்தலாம். மிக நீண்ட பயணத்தில் காண்டாக்ட் லென்ஸ் மாற்றுவதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கும். தூய்மையான சூழலும் இருக்காது. எனவே மிக நீண்ட நேரம் காண்டாக்ட் லென்ஸை மாற்றாமல் வைக்கும் போது, அது ரெட்டினாவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கவனம்!
- டைட்டான ஆடைகள்
ஆடைகளை மிக டைட்டாக அணிவதை விமான பயணத்தின் போது பார்க்கலாம். பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போது உடலின் ரத்த ஓட்டத்தில் தொய்வு ஏற்படலாம். இது உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் சீரான ரத்த ஓட்டத்தை தருவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். அதுபோன்ற சமயங்களில் ரத்த ஓட்டத்தை மேலும் தடை படுத்த கூடிய டைட்டான ஆடைகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது. மிக நீண்ட தூர விமான பயணத்தில் செல்லும்போது கால்களில் ரத்த உறைவை ஏற்படுத்தலாம். அதுபோன்ற சூழலில் இறுக்கமான ஆடைகள் மேலும் மோசம் அடையச் செய்யும்.
- உயர் குதி உள்ள செருப்புகள்
விமானத்தில் உரிய நேரத்தில் ஏற வேண்டும் என்பதற்காக மிக அதிவேகத்தில் பயணிப்பவர்களும் உண்டு. கடைசி நேரத்தில் ஓடிச் செல்ல ஹை ஹீல்ஸ் உதவாது. ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு மிக நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது கால்களில் வீக்கம் ஏற்படக்கூடும். எனவே சாதாரண காலணிகளை அணிவது கால்களுக்கு உகந்ததாகும்.
- குளிராடைகள்
விமானத்தில் அதிக ஏசி போட்டு இருப்பதால் குளிர் அதிகம் இருக்கக்கூடும். எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடைகள் எடுத்துச் செல்லலாம். அதாவது ஜாக்கெட், ஷ்ரக், ஷால், ஸ்டோல் போன்றவற்றை எடுத்துச் செல்லும்போது தேவைப்பட்டால் அணிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் கழற்றி வைத்துக் கொள்ளலாம்.
- அரிக்கக் கூடிய ஆடைகள்
நீண்ட தூரப்பயணம் அதுவும் பொதுவெளிப் பயணம் என்பதால் அரிப்பு இல்லாத ஆடைகளை அணியலாம். ஒரு சில ஆடைகள் அல்லது உள்ளாடைகள் உங்களுக்கு அரிப்பு ஏற்படுத்த கூடும், என்றால் அதனை தவிர்க்கவும். இது, அரித்தாலும் சொரிய முடியாத சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்திவிடும்.
- எளிதில் உதவாத ஆடை
ஜம்ப் சூட் போன்ற ஆடைகள் விமானத்துக்கு ஏற்றதல்ல. ஏனெனில் விமானத்துக்குள் இருக்கும் கழிப்பறை மிகவும் சிறியதாகும். அங்கு ஜம்சூட் போன்ற ஆடைகளை கழற்றி இயற்கை உபாதைகளை கழிப்பது என்பது சற்று சிரமமானது. எனவே பேன்ட் அல்லது ஸ்கர்ட் அணிவது எளிதாக இருக்கும்.