பழைய சாதத்தை வைத்து பரோட்டா செய்வது எப்படி?

பரோட்டா என்றாலே கடைகளில் வாங்கி உண்ணும் உணவு தான் இருக்கிறது வளரும் நினைத்திருப்பார்கள். ஆனால், வீட்டில் மதியம் மீந்து போன சாதத்தை வைத்துக் கூட பரோட்டா செய்யலாம். அதுவும் லேயர் லேயர் ஆக பரோட்டா வரவேண்டும் என்றால் இப்படி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப் தண்ணீர் – 1/2 கப் மைதா – 2 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் சாதத்தை போட்டுக்கொள்ளுங்கள்.

1/2 கப் நீரை ஊற்றி அதை நன்கு மென்மையாக அரைக்கவும்.

அதில் 2 கப் மைதா மாவை சேர்த்து கொள்ளவும்

பரோட்டாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

1/4 கப்பிற்கு சற்று அதிகமாக நீரை மீண்டும் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

முதலில் அரைக்கும் போது சற்று இறுக்கமாகத் தான் தெரியும்.

ஆனாலும் தொடர்ந்து அரைக்கும் போது மாவு மிகவும் மிருதுவாக இருக்கும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு வையுங்கள்.

மேலே 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி, ஈரத்துணி கொண்டு மூடி வைத்து விடுங்கள்.

1/2 மணிநேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

அரை மணிநேரம் கழித்து, கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்து வைத்த மாவை மீண்டும் சில நிமிடம் பிசைந்து விட வேண்டும்.

பின் அந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

பிறகு பரோட்டா தேய்க்கும் இடத்தில் எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து, மெல்லியதாக தேய்க்கவும்.

அதற்கு மேல் சிறிது மைதா மாவை தூவி கைகளால் தடவி, தேய்த்த மாவை எடுத்து, அப்படி கையில் உருட்டி வைக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

பின்பு உருட்டி வைத்துள்ள பரோட்டாவை மாவை எடுத்து, அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக தேய்த்துக் கொள்ளவும்.

இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், தேய்த்து வைத்துள்ள பரோட்டாவை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைக்கவும்.

பின் பரோட்டாவை சூடாக இருக்கும் போது கைகளால் நன்கு அடித்து விட வேண்டும். கடைகளில் பார்த்தது நினைவிருக்கலாம்.

இதேப் போல் அனைத்து பரோட்டாக்களையும் லேயர் லேயராக செய்ய வேண்டும்.

இதற்கு வீட்டிலேயே வெஜிடேரியன் அல்லது நான் வெஜிடேரியனல்ஸ் சால்னா செய்து கொள்ளலாம்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE