முக்காடு போட்டனா? லதா ரஜினிகாந்த் விளக்கம்

கோச்சடையான் படத்துக்கான வழக்கு தொடர்பாக தான் லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

2014 ஆம் ஆண்டு கோச்சடையான் படம் 3டி இல் வெளியானது.

கே எஸ் ரவிக்குமார் இதற்கு கதை அமைத்திருந்தார். ரஜினிகாந்த் உடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்/

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் இன்றி சரத்குமார், தீபிகா படுகோன், ஆதி, நாசர், நடித்திருந்தனர்.

முப்பரிமாண முறையில் வெளிவந்த தமிழ் திரைப்படம் என்று பெருமையை பெற்றிருந்தாலும் நடிகர் ரஜினிகாந்தை இயல்பில் பார்த்து ரசிக்கவே, ரசிகர்கள் ஆசைப்பட்டனர். இதன் காரணமாக திரைப்படம் நன்றாக ஓடவில்லை.

பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதோடு திரைப்படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த திரைப்படத்தை எடுப்பதற்காக மீடியா ஒன் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ஆட் பீரோ என்ற நிறுவனத்தை சேர்ந்த அபர்ச்சந்திடம் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனுக்காக நடிகர்கள் ரஜினிகாந்த், மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் உத்தரவாத கையெழுத்திட்டதாகவும் குறித்த காலத்தில் உடனே திரும்ப வழங்காததால் அவர் மீது வழக்கும் பதியப்பட்டது.

இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முன்ஜாமின் பெற்று இருந்ததால் லதா ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதை அடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

அப்போது தலையில் முக்காடு போட்டு நீதிமன்றத்திற்கு சென்றதாக வீடியோ வைரலானது.

இது குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் “வாரண்ட் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மோசடி எதுவும் செய்யவில்லை. செலிபிரிட்டியாக இருப்பதால் வன்மத்துடன் தொடரப்பட்ட வழக்கு இது. வழக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்த வருகின்றனர். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தேன். தலையில் முக்காடெல்லாம் போடவில்லை. வெயில் அடித்ததால் துப்பட்டாவைத் தலையில் போட்டு கொண்டேன்.” என கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.