சங்கி என அழைத்தோருக்கெல்லாம் செம பதிலடி
லால் சலாம் படத்தின் ஆடியோ லான்சில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “எங்க அப்பா ஒரு சங்கி இல்லை என்பது இந்த படத்தின் மூலம் தெரிய வரும்” என்று கூறியிருந்தார்.
அப்போது அந்த பேச்சு வைரலானது. அதுமட்டுமின்றி சங்கி என்ற வார்த்தையும் பிரபலமானத. பிபிசி முதல் கொண்டு அந்த வார்த்தையின் அர்த்தத்தை ஆய்வு செய்து ஒரு கட்டுரையை எழுதியது.
படம் வெளியான போதும் ரசிகர்களும் இதே கருத்தை தான் கூறி வருகின்றனர்.
படம் எப்படி உள்ளது?
வழக்கம் போல ஒரு ரஜினியின் ரசிகனாக மாஸ் படத்தை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரவில்லை. ஆனால், சமூகத்திற்கு அவசியமான ஒரு கருத்தை இந்த படம் வலியுறுத்துவதால் ஒரு நல்ல திரைப்படத்தை ரஜினியின் தோற்றத்தோடு பார்த்துவிட்டு வெளியே வந்ததாகத் தான் ஒவ்வொரு ரஜினி ரசிகர்களுக்கும் உணர்வு உள்ளது.
ரஜினி ரசிகர்களாக இல்லாதவரும் இந்த படத்தை வரவேற்று பாராட்டி வருகின்றனர். தற்காலத்துக்கு ஏற்ற சமூக அரசியல் சூழ்நிலைகளை அப்படியே கிரகித்து மிகவும் இயல்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் எடுத்து இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
படத்தின் கதை என்ன?
லால் சலாம் படத்தின் கதையாக விக்ராந்திற்கும் விஷ்ணுவுக்கும் இடையே அவ்வப்போது போட்டி பொறாமை சிறுவயதில் இருந்து உள்ளது. ஒரு கட்டத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஹீரோ கிரிக்கெட்டில் நன்றாக விளையாட பொறாமை காரணமாக அவர் வெளியேற்றப்படுகிறார். அவர் வெளியேறியதன் விளைவாக இரு அணியாக கிரிக்கெட் அணி பிரி. இந்த உள்ளூர் கிரிக்கெட் அணியின் இரு அணிகளும் இந்து முஸ்லீம் என மதத்தினை சேர்ந்த அணியாக பிரிவதால் அந்த ஊர் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. இதில் ஒரு சமூகத்தின் தலைவராக அதாவது இஸ்லாமிய சமூகத்தின் தலைவராக மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் மிகச் சிறப்பாக தனது நடிப்பை அளவோடு வெளிப்படுத்தி உள்ளார்.
ஏ ஆர் ரகுமானுடன் தர்காவுக்கும் செல்வா ரஜினிகாந்த், அதுவே ராமர் கோவிலுக்கும் திறப்பு விழாவுக்கு அவர் செல்வார் என அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.
இப்படத்தில் செந்தில் தனது கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்துள்ளதாகவும் இந்து இஸ்லாமியர் என யார் இந்த படத்தை பார்த்தாலும் புல்லரிக்கும் நிலையில் தான் கதை மிகவும் இயல்பாக இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.