விவாகரத்து – தத்துக்கொடுப்பு : உண்மையை உடைத்த கிருத்திகா
மெட்டி ஒலி நாடகம் 90ஸ் கிட்ஸ்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒரு நாடகம். சமீபத்தில் அந்த நாடகத்தில் நடித்த பல நடிகர்களுமே மீண்டும் சின்னத்திரை நாடகங்களில் நடிக்க தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. உதாரணமாக தனம் கதாபாத்திரத்தில் நடித்த ஏஞ்சலா ஒரு ஆங்கிலோ இந்தியன் என்ற பேட்டியும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இவர்கள் அடுத்தடுத்து நாடகங்களில் கமிட் ஆகி வரும் நிலையில் மெட்டி ஒலி நாடகத்தில் நடித்த கிருத்திகா தனது வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
கிருத்திகா தற்போது பாண்டவர் இல்லம் நாடகத்தில் நடித்து வருகிறார். தனது சொந்த வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில்.. “எனது உறவினர் மகனான அருண் என்பவரை, பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். இருவருக்கும் ஆரம்பம் முதலே பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. ”
“இதன் காரணமாக, இருவரும் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் பேசி விவாகரத்து பெறும் முடிவை எடுத்தோம். விவாகரத்தை நான் முதலில் கேட்கவில்லை. ” என்றார்.
இருவருக்கும் ஒரு மகன் இருப்பதால் அவரின் எதிர்காலம் கருதி தான் முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால் வருங்காலத்தில் தந்தை இல்லையே என்று அவன் வருத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மகன் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததால் அவனைத் தத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறியதாலும், அப்போது குழந்தை இல்லாமல் இருந்த தனது அண்ணனுக்கும் அண்ணிக்கும் தனது மகனை தத்து கொடுத்து விட்டதாகவும் கிருத்திகா கூறி உள்ளார்.
இன்று வரை எனக்கு குடும்பமும், மகனும்தான் பக்கபலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணனுக்கும், அண்ணிக்கும் அடுத்த குழந்தை பிறந்தாலும் கூட, தனது மகனை சொந்த அப்பா அம்மா போல் அவர்கள் அன்புடன் கவனித்து வளர்த்து வருவதாக கூறியுள்ளார் கிருத்திகா. தான் சரியான முடிவைத்தான் எடுத்தேன் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.