பிக்பாஸ் சீசன் 7 தமிழில் மாயா, பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் என பலரும் ஸ்ட்ராங்கான போட்டியாளர்களாக உள்ளனர். 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. அதன் சுவாரஸ்யம் குறையாதபடி ரசிகர்களின் கமென்ட்டுக்களுக்குத் தீனி போடும் வகையில் உள்ளது கன்டென்ட்டுகள்.

இந்த வாரம் ரவீனா, விசித்ரா, சரவண விக்ரம் ஆகிய மூவரும் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். கடந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேறினார். அதற்கு முன், இரு தினங்களுக்கு முன் மிட் வீக் எவிக்‌ஷனில் அனன்யா வெளியேறினர். இறுதி நாட்கள் நெருங்குவதால் வாரம் இரு எலிமினேஷன் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சரவண விக்ரம் ஆரம்பம் முதலே டைட்டில் வின்னர் என சமூக வலைதளங்களில் புகழப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு பிக்பாஸில் குமரனுக்குக் கிடைத்து அவர் மறுத்து, பின், சரவண விக்ரமுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.

இதை கவனிச்சீங்களா?

விக்ரமின் தந்தை ஃப்ரீஸ் டாஸ்கில் வீட்டுக்குள் வந்தபோது, “மயிராண்டி மாறி பண்றானுங்க” என ஒரு கெட்ட வார்த்தை பேசினார். இது லைவில் வருகிறது என்று தெரிந்துமே அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது.

முந்தைய எபிசோடுகளில் பெற்றோர்கள் உள்ளே வந்தால், தங்களது பிள்ளைகளை மட்டும் வைத்து பேசிவிட்டு சக போட்டியாளர்களை நலம் மட்டும் விசாரித்து விட்டு செல்வார்கள். ஆனால் இந்த முறை தங்களது பிள்ளைகளை வைத்து செய்த சக போட்டியாளர்களை கேள்வி கேட்டு துளைத்து எடுக்கின்றனர்.

பூர்ணிமாவின் தாயார் வந்தபோது விஷ்ணுவிடம் பேச முயற்சித்தார். ஆனால் அதனை பூர்ணிமா தடுத்துவிட்டார்.

அர்ச்சனாவின் தந்தை கூட சக போட்டியாளர்களிடம் தங்களது மகளை நடத்தும் விதத்தை குறித்து பேசினார்.

இதே போல் தான் ரவீனாவின் பெற்றோர்களும் ஆனால் அவர்கள் பொறுமையாக அமர வைத்து நிக்சன் உள்ளிட்டோரிடம் பஞ்சாயத்து பேசினர்.

விசித்திராவின் கணவர் வந்தபோது, “எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த 2 செயல்கள் தான் ரொம்பவே கஷ்டப்படுத்தியது என்று சொன்னார்.

சர்க்கரையை ஒழித்து வைத்ததற்காக தினேஷ் விசித்திராவை பேசியதும், பொம்மை டாஸ்க்கில் அர்ச்சனா விசித்திரா மீது உள்ள கோபத்தை கொட்டியதும் தான் என்றார்.

இந்தநிலையில் இந்த வாரம் சனிக்கிழமை விசாரணை எபிசோட் முடிந்த பின் சரவண விக்ரம் எவிக்ட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த எபிசோட் ஞாயிறன்று ஒளிபரப்பாகலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE