என்னதான் தாய், தந்தை குழந்தைகளை வளர்த்தாலும் தாத்தா பாட்டியிடம் இருந்து பெரும்பாலும் குழந்தைகள் ஒரு சிலவற்றை சிறப்பாகவே கற்றுக் கொள்ளும். அந்த விஷயங்கள் என்னென்ன என்பதை தற்போது த காரிகையின் சிறப்பு கட்டுரையில் பார்க்கலாம்

இணைந்து இருப்பது

இணைந்து இருக்கும் வளர்ப்பு முறையில் குழந்தைகள் பெரும்பாலும் தாத்தா பாட்டிகளிடம் கற்றுக் கொள்வர். அதிக தலைமுறை இடைவெளி இருக்கும் போது பழக்கவழக்கங்களைகற்கும் இடை வெளி குறையும் என நம்பப்படுகிறது.

மரியாதை

என்னதான் பெற்றோர் செல்லம் கொடுத்தாலும் மரியாதையை தாத்தா, பாட்டி கற்றுக் கொடுக்கும் போது குழந்தைகள் சற்று கண்டிப்புடன் கற்றுக் கொள்கிறார்கள். மரியாதையின் முக்கியத்துவம் என்ன என்பதை ஒவ்வொரு குழந்தையும் பெரும்பாலும் தங்களது தாத்தா பாட்டிகளிடமிருந்து கற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது.

குடும்ப பிணைப்பு

குழந்தைகளுக்கு பெற்றோரை விட குடும்ப பிணைப்பை அதிக அளவு அன்போடு சொல்லிக் கொடுப்பது அவர்களது தாத்தா பாட்டிகளே. யார் யாருடன் எப்படி பழக வேண்டும்? எப்படி மரியாதை உடன் நடக்க வேண்டும்? எப்படி அன்பு செலுத்த வேண்டும்? என்றும் அவர்கள் கற்றுக் கொடுக்கின்றனர்.

நல்லொழுக்கம்

சாப்பிடும்போதும், பிறரிடம் பொருட்களை கொடுத்து வாங்கும்போது வலது கையை பயன்படுத்துவது முதற்கொண்டு, பிறர் முன் மரியாதையாக பேசுவது, அடக்க ஒடுக்கமாக அமர்வது, நற்பண்புகளுடன் நடந்து கொள்வது எப்படி என்பதை பெற்றோரை விட தாத்தா பாட்டியே ஒரு சில நேரங்களில் சிறப்பாக கற்றுக் கொடுக்கின்றனர்.

குடும்ப வரலாறு

குழந்தைகளிடம் வீட்டுக்கு வருவோரை அறிமுகப்படுத்தும் பண்பு பெரும்பாலும் தாத்தா பாட்டிகளுக்கு அதிகம் இருக்கும். இதனால் குடும்ப வரலாறும் தாத்தா பாட்டி மூலம் குழந்தைகளுக்கு தெரிய வரும். குறிப்பாக “அந்த காலத்திலே எங்க தாத்தா. . . உங்க பாட்டி. . அவங்க அம்மா, அப்பா. . ” அப்படின்னு கதை சொல்லும் போதும் அவர்களுடைய குடும்ப வரலாறு குழந்தைக்கு நன்கு அத்துப்படியாகும்.

பகிரும் பண்பு

பொருட்களை ஆகட்டும், அன்பை ஆகட்டும் குழந்தைகள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வும் தாத்தா பாட்டி சொல்லிக் கொடுப்பர். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேரன்-பேத்திகள் இருக்கும்போது அனைவருக்கும் கிடைக்கும் பொருட்களை சரிசமமாக பகிர்ந்து கொடுத்தல், அவர்களை சமாதானப்படுத்துதல் போன்ற பணிகளும் பெரும்பாலும் தாத்தா பாட்டிகளுடையதாகவே இருக்கும்.

கணிவு

அனைத்து உயிர்களிடத்திலும் கணிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பை குழந்தைகளிடம் மேம்படுத்துவதில் தாத்தா பாட்டிக்கு பங்கு அதிகம். மனிதர்களை ச okக மனிதர்களாக மதிக்க கற்றுக் கொடுப்பதையும் அவர்கள் தவறுவதில்லை.

பொறுப்புக்கள்

குழந்தைகள் வீட்டுக்கு வரும்போது இந்த வேலை உன்னுடையது என ஒரு சில பொறுப்புகளை அவர்களிடம் வழங்குவார்கள். இது தங்களையும் மதித்து பணிகளை வழங்குகின்றனரே என குழந்தைகளுக்கு தங்கள் மீதே ஒரு மரியாதை கூடும்.

சுதந்திரம்

புது பெற்றோர்களாக இருந்தால் குழந்தைகளுக்கு காயம்பட்டு விடும் என பெரும்பாலும் பல விஷயங்களை அவர்கள் முனைப்போடு செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால், சுதந்திரத்தை வழங்குவதில் தாத்தா பாட்டிகள் பெற்றோர்களை விட சிறப்பாக சில சமயங்களில் செயலாற்றுவர்.

ஓய்வு

குழந்தைகள் தங்களுடைய வயதுக்கு ஏற்பவும், பொருளாதார நிதி நெருக்கடிகளுக்கு ஏற்ப்பவம் உண்டாகும் டென்ஷனை சில சமயம் குழந்தைகள் மீது செலுத்தி விடுவர். ஆனால் தாத்தா பாட்டிகள் நிதானத்தை கடைப்பிடிப்பவர்கள் என்பதால் குழந்தைகளை ரிலாக்ஸ் செய்து அமைதியாக வைத்திருப்பதில் கைதேர்ந்து விடுகின்றனர்.

விளையாட்டு

தற்காலத்தில் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பெரும்பாலான பெற்றோர் பணம் சம்பாதிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவதால் தாத்தா பாட்டிகள் குழந்தைகளோடு விளையாடுவதில் கம்பெனி கொடுக்கின்றனர். ஒரு சில தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு பெயிண்டிங், பஷில் சால்வ் செய்வது போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகின்றனர்

சேமிப்பு

தாத்தா பாட்டி வீட்டுக்கு போகும்போதெல்லாம் அல்லது உடன் வசிக்கும் போதும் பிறந்தநாள் உள்ளிட்ட விசேஷ நாட்களில் குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது ஒரு வழக்கமாக கொண்டிருப்பார். இதன் மூலம் குழந்தைகள் சேமிப்பை பழகுகின்றன. என்னதான் பெற்றோர் குழந்தைகளுக்கு தேவையான செலவுகளை செய்தாலும் அவர்கள் கையில் சற்று பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தோன்றுவதில்லை என்றே சொல்லலாம்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூகவலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE