நடக்காவிட்டால் மாரடைப்பு வருமா? ஷாக் ரிப்போர்ட்

உடல் இயக்கம் குறைந்தாலும் நடக்காமல் விட்டாலும் போதிய அளவு ரத்த ஓட்டம் இதயத்திற்கு செல்லாமல் அது மாரடைப்பு ஏற்படுத்த கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

நம் உடலின் 2வது இதயம் என்று நமது கெண்டைக்கால் கணுக்காலிகளின் தசைநார்கள் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் சோலியஸ் தசைகள் என்று சொல்வார்கள்.

நமது உடலில் பாதங்கால்களும் கணக்கால்களும் எப்போதும் ரத்த ஓட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும். இதற்கு புவியீர்ப்பு விசை ஒரு காரணம்.

ஆனால், உடலை இயக்காமல் அசையாமல் அந்த ரத்த ஓட்டமானது பாதிக்கப்படக்கூடும்.

கைகளில் உள்ள தசை, வேகமான இயக்கத்துக்கு உதவும். இந்த நிலையில் கால்களில் உள்ள சோலியஸ் தசைநார்கள், மெதுவாக செயல்படும் தன்மையை கொண்டிருக்கும்.

உடலின் தடிமனான அந்த தசை நார்களை அசைக்கும் போது அது காலில் இருந்து ரத்த ஓட்டத்தை உடலுக்கு மேலே பம்ப் செய்ய உதவும்.

எனவே இருதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் கிடைத்து அது உடல் முழுவதும் சீராக இயங்க வைக்கும்.

எனவே அதிவேகமும் இல்லாமல் குறைந்த இயக்கமும் இல்லாமல் சீரான நடைபயிற்சி என்பது உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நீங்கள் வெகு நேரம் நடக்காமல் இருந்தீர்கள் என்றால் உங்கள் காலில் வீக்கம் இருந்தால் அது நடை பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தை உங்களுக்கு எச்சரிக்கும் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். அதுமட்டுமின்றி இது மாரடைப்புக்கான முக்கிய அறிகுறியாகவும் இருக்கும். கவனம்.

இப்படி ஒரு 2-வது இதயம் செயல்பாடு இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது என்ற போதிலும் இந்த பயனுள்ள தகவலை பிறருக்கும் பகிரவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE