கதிர் முல்லை கதாபாத்திரத்தில் இவங்கதானாம்
பரபரப்பாக கிளைமாக்ஸ் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம். இந்த நாடகம் முடிவதற்கு முன்பாகவே விஜய் டிவி அந்த நாடகத்தின் 2-ஆம் பாகத்துக்கான பிரமோவை வெளியிட்டுள்ளது. இதை பலரும் சற்றும் எதிர்பார்த்து இருக்காத ஒரு விஷயம் தான்.
விஜய் டிவி வரலாற்றிலேயே 5 ஆண்டுகள் வரை ஓடிய ஒரு நாடகம் என பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழப்பட்டு வருகிறது. அதுவும் முதல் 3 இடங்களுக்குள் டிஆர்பி-யில் இடம் பிடித்த நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆக இருந்தது. ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பலரும் இதில் நடித்தனர்.
மிகவும் கஷ்டப்பட்டு கடனில் சிக்கி வாழ்ந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் 4 அண்ணன் தம்பிகள். தாயோ மாற்றத் திறனாளி. அவர்கள் பல சூழல்களிலும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் பிரிந்து சென்று மீண்டும் இந்த குடும்பத்தோடு வந்து இணைந்து கொண்டனர்.
படிப்படியாக உழைத்து முன்னேறியதன் விளைவாக சாதாரண மளிகை கடை சூப்பர் மார்க்கெட் ஆக மாறியது. குழந்தையே இல்லாதவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. அதேபோல் ஓட்டு வீடும் மாடி கட்டிடமாக மாறி அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்று விட்டனர்.
மீனா என்ற கதாபாத்திரத்தின் அப்பா ஜனார்த்தனன் தான் அந்த ஊரிலேயே பெரிய பணக்காரராக இருந்தார். ஆனால் அவருக்கே மருத்துவமனை செலவுக்கு பணம் தரும் அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் பொருளாதார ரீதியாகவும் உறவு ரீதியாகவும் முன்னேறிவிட்டனர்.
இது அவர்களுக்கு ஒரு வெற்றி என்பது ஒரு பிம்பம் உருவாவதால் இந்த இடத்தில் சுபம் போட்டால் சரியாக இருக்கும் என முடிவெடுத்திருக்கிறார் போல இயக்குனர். எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் முதல் பாகம் முற்றுப்பெறுகிறது.
2-ஆம் பாகத்தில் யார்? யார்?
மூர்த்தியாக நடித்த அதே ஸ்டாலின் தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வருகிறார். சின்ன பாப்பா பெரிய பாப்பா நாடகத்தில் நடித்த நிரோஷா தனம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மூர்த்திக்கு 3 ஆண் பிள்ளைகள். இந்த நிலையில் யார் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள்? என்ன கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் தான் ‘கதாநாயகி’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரன்னராக வந்த ஷாலினி, முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறாராம். ஆகாஷ் பிரேம்குமார் என்பவர் திரைப்படங்களில் ஹீரோவுக்கு நண்பன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த நடிகர் கதிரின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என தெரியவந்துள்ளது. கதாநாயகி என்ற ரியாலிட்டி ஷோவில் வெற்றி மகுடம் சூடியவருக்கு கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் ரன்னர் அப்பாக வந்த ஷாலினிக்கு கிடைத்து விட்டதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.