கார்த்திகைல விரதம் ஏன் ஸ்பெஷல் தெரியுமா?

மழை-வெயில்-பனி என 6 காலங்களில் 3 காலங்கள் சேர்ந்து வரும் கார்த்திகை மாதமானது ஐயப்பன் மட்டுமுன்றி முருகன் உள்ளிட்ட தெய்வங்களையும் வணங்கக் கூடிய மாதமாகும். எனவே, ஆன்மிக ரீதியாகவும் அனைத்து தெய்வங்களின் வழிபாட்டிற்கும் உரிய மாதமாக கார்த்திகை உள்ளது. மார்கழி ஆண்டாளுக்கானது.. அதன் சிறப்புக்களை அடுத்த மாதம் பார்ப்போம்.

சங்காபிஷேகம்

கார்த்திகை சோமவார விரதம் இருந்து சிவனுக்கு சங்காபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் நமக்கு கிடைக்கும். இந்த மாதத்தில் முருகனுக்கும், ஐயப்பனுக்கும் மாலை அணிந்து வழிபடுவார்கள்.

பரணி தீபம்

திருக்கார்த்திகை தீபத்திற்கு முந்தைய தீபம் பரணி தீபம் யம தீபம் ஆகும். மரணத்தில் சுகமும், யம யோக துன்பமின்றி இறைவனடி சேரவும், முன்னோர்களும் யம துன்பங்களில் இருந்து விடுபடவும் இந்த பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

உமா மகேஸ்வர விரதம்

கார்த்திகை ஞாயிறுகளில் உமா மகேஸ்வர விரதம் இருந்தால், தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். இறைவனான சிவனையும், இறைவியான சக்தியையும் நினைத்து இருக்கும் விரதத்திற்கு ‘உமா மகேஸ்வர விரதம்’ என்று பெயர்.

மோட்சம்

விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் பூஜை செய்பவர்கள் மோட்ச நிலையை அடைவார்கள்.

கார்த்திகை தீபம்

கார்த்திகையில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

துளசி கல்யாணம்

கார்த்திகை ஏகாதசிக்கு மறு நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்யவும். துளசி மாடத்தில் நெல்லி மர கிளையை வைத்துப் பூஜித்தாலும், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்குமாம்.

கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.

கார்த்திகையில் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.

கார்த்திகையில் அதிகாலையில் நீராடி வழிபட்டால் துன்பங்கள் விலகும்.

கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்.

மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE