சுட்டெரிக்கும் சூரியன் வீட்டின் கூரையை தாண்டியும் கொளுத்தி தள்ளுவதால் உடல் அதிக அளவு நீர்ச்சத்தை இழக்கிறது.

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் சற்று நேரத்தில் உதடும் தொண்டையும் வறண்டு போய் மக்கள் படாத பாடுபடுகின்றனர்.

வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு இந்த நிலைமை என்றால், வெளியே சென்று வெயிலில் வேலை செய்பவர்களுக்கும் அல்லது விளையாண்டு விட்டு வரும் குழந்தைகளுக்கும் சத்தான ஆகாரத்தை கொடுக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத்தின் கடமையாகவே தற்போது மாறிவிட்டது.

என்னதான் சூரியன் தனது டெம்பரேச்சரை ஏற்றிக்கொண்டே சென்றாலும் அதற்கு ஈடு கொடுக்க உடலையும் குளிர வைப்பது நல்லது.

அப்படி உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது கம்பங்கூழ்.

இருக்கும் சிறுதானிய உணவுகளிலேயே அதிக அளவு புரோட்டின் அதாவது 11.8% புரோட்டினை கம்பு கொண்டிருக்கிறது.

இதில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகை உள்ளவர்களும் கர்ப்பிணிமார்களும் இதனை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்தாக வேண்டும் என்று முயற்சிப்பவர்களும் கம்மங்கூழ் வீட்டில் செய்து சாப்பிட வேண்டும்.

கம்மங்கூழ் செய்வது எப்படி?

வெறும் கம்பு மட்டுமே கொண்டு செய்வதாக பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் கம்பங்கூழ் செய்யும் போது ஒரு பிடி அரிசியும் சேர்க்க வேண்டும்.

கம்மங்கூழ் செய்ய தேவையான பொருட்கள்

கம்பு ஒரு கப்

அரிசி ஒரு கைப்பிடி

தேவையான அளவு தண்ணீர்

தேவையான அளவு உப்பு

தயிர்

சின்ன வெங்காயம்

முதலில் கம்பை நன்றாக நீரூற்றி அலசிவிட்டு கற்கள் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

பின்பு அந்த ஊற வைத்த கம்பை வெயிலில் காய வைத்து எடுத்து மிக்ஸியில் சற்று பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

உடைத்த கம்பில் சற்று தண்ணீர் ஊற்றி கலக்கி தோசை மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கம்பு மாவை மூடி போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.

இந்த கம்பு மாவானது ஒரு நாள் இரவு வரை புளித்து இருக்க வேண்டியது அவசியம்.

இதை எடுத்து ஊற வைத்து ஒரு பிடி அரிசியை பொடித்து பின் முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கம்பு மாவையும் அரிசியையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து வேகவிட வேண்டும்.

நன்றாக வெந்ததும் கட்டி இல்லாமல் அதை உடைத்து விட வேண்டும்.

அதன் பின்பு உப்பு சின்ன வெங்காயம், தயிர் ஆகியவற்றை போட்டு கரைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் குளுமை தரும்.

பள்ளிக்கோ சம்மர் கிளாஸ் அல்லது அலுவலகத்துக்கோ செல்பவர்களுக்கு இதனை ஒரு ரெஃபரஸ்மெண்ட் ஆக கொடுத்துவிடலாம்.

Facebook
Instagram
YOUTUBE