கமல் Vs விஜயகாந்த். வென்றது யார் தெரியுமா?

பெரும்பாலும் ரஜினி கமல் மத்தியில் தான் தமிழ் திரை உலகில் போட்டி இருப்பதாக சொல்லப்படும். ஆனால் நடிகர் விஜயகாந்த் நடிகர் கமலுக்கு பயங்கர டஃப் கொடுத்த கதை நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படி ரஜினியும் கமலும் பீக்கில் இருந்த போது சினிமாவில் நுழைந்தவர் தான் விஜயகாந்த்.

தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்ற அவர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இந்த வளர்ச்சி ஆனது ஒரு கட்டத்தில் ரஜினி கமல் படங்கள் வெளியாகும் அதே நாளில் விஜயகாந்த் படமும் ரிலீஸ் ஆகி டஃப் கொடுக்கும் அளவு முன்னேறியது. விஜயகாந்தின் வளர்ச்சியை பார்த்து ரஜினியே ஆச்சரியப்பட்ட காலங்களும் உண்டு

80 90களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் விஜயகாந்த். 1981 முதல் 2004 வரை கமல் படங்களோடு விஜயகாந்த் நடித்த படங்கள் 22 முறை மோதின.

தீபாவளி பொங்கல் விசேஷ நாட்கள் என திருவிழா போல இருவரின் ரசிகர்கள் படங்களின் வெளியீட்டுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் இருதரப்பு ரசிகர்களுக்கும் உருவாக்கும் வகையில் ஒரே நாளில் படங்கள் ரிலீஸ் ஆகின.

அப்படி எந்தெந்த படங்கள் மோதி யாருடைய படங்கள் அதிக வெற்றி பெற்றது என்பதை பார்க்கலாம்.

கமல் விஜயகாந்த் வெற்றி

சங்கர்லால் – சிவப்பு மல்லி – கமல்

மூன்றாம் பிறை – பார்வையின் மறுபக்கம் – கமல்

எனக்குள் ஒருவன் – வைதேகி காத்திருந்தாள் – விஜயகாந்த்

ஒரு கைதியின் டைரி – அலையின் ஓசை – கமல்

காக்கி சட்டை – ராமன் ஸ்ரீராமன் – கமல்

ஜப்பானில் கல்யாணராமன்- ஏமாறாதே ஏமாற்றாதே – விஜயகாந்த்

புன்னகை மன்னன் – தர்ம தேவதை, தழுவாத கைகள் – கமல்

காதல் பரிசு – சிறைப்பறவை – விஜயகாந்த்

நாயகன் – உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு – கமல், விஜயகாந்த்

உன்னால் முடியும் தம்பி – தம்பி தங்க கம்பி, நல்லவன் – விஜயகாந்த்

வெற்றி விழா – தர்மம் வெல்லும், ராஜநடை – கமல்

மைக்கேல் மதன காமராஜன் – சத்ரியன் – கமல், விஜயகாந்த்

குணா – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – இரு படமுமே சுமார் வெற்றி

சிங்காரவேலன் – பரதன் – இரு படமுமே சுமார் வெற்றி

தேவர்மகன் – காவியத்தலைவன் – கமல்

மகாநதி – சேதுபதி ஐபிஎஸ் – விஜயகாந்த்

நம்மவர் – பெரியமருது – இரு படமுமே சுமார் வெற்றி

சதிலீலாவதி – கருப்பு நிலா – இரு படமுமே சுமார் வெற்றி

அவ்வை சண்முகி – அலெக்சாண்டர் – கமல்

ஆளவந்தான் – தவசி – விஜயகாந்த்

அன்பே சிவம் – சொக்கத்தங்கம் – விஜயகாந்த்

விருமாண்டி – எங்கள் அண்ணா – கமல்

ஆக மொத்தம் 22 முறை கமலும் விஜயகாந்த்தும் ஒரே நாள் பட ரிலீஸ் போட்டியில் மோதியுள்ளனர். இதில் கமலின் படங்கள் 9 முறையும் விஜயகாந்த் படங்கள் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 6 முறை இருவரின் படங்களுமே சுமாரான வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE