குருமா என்றாலே தினமும் போர் அடிக்கும். நேற்று செய்த அதே டிபன் வகையை செய்தால் கூட போனால் போகட்டும் குருமாவாச்சே என்று சாப்பிடக்கூடிய அளவுக்கு பொதுவாகவே குருமாவுக்கு ஒரு ஸ்பெஷல் விதிவிலக்கு உண்டு.

அப்படி குருமாவிலும் ஒயிட் குருமா செய்து பார்த்து இருந்தீர்கள் என்றால் இனி அதைத்தான் அடிக்கடி செய்வீர்கள் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா என அனைத்து டிபன் வகைகள் இது மிகவும் அருமையாக இருக்கும்.

தற்போது அந்த கையேந்தி பவன் ஸ்டைலில் ஒயிட் குருமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

வதக்கி அரைக்க தேவையானவை

பெரிய வெங்காயமும் 1

2 ஸ்பூன் பொட்டுக்கடலை

2 ஸ்பூன் பச்சை மிளகாய்

6 பல் பூண்டு

முழு முந்திரி 8

இஞ்சி ஒரு சிறிய துண்டு

தேங்காய் துண்டுகள் 3 ஸ்பூன்

கிராம்பு 4

பட்டை பெரிய துண்டு 1

வேகவைக்க

கேரட் 1

பச்சை பட்டாணி 1 கப்

பீன்ஸ் 4

காலிஃபிளவர் 10 துண்டுகள்

உருளைக்கிழங்கு 1

வதக்க தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய தக்காளி

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1

கிராம்பு 4

சோம்பு அரை ஸ்பூன்

பட்டை கொஞ்சம்

கல்பாசி கொஞ்சம்

துண்டு துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் 1

கருவேப்பிலை 2 கொத்து

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் 2 ஸ்பூன்

தண்ணீர் தேவையான அளவு

எப்படி செய்வது?

பெரிய வெங்காயத்தை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காயை துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு வெங்காயத்தையும், தக்காளியையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இது வதக்குவதற்கு தேவைப்படும்.

அடுப்பை சிம்மில் வைத்து கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விடவும். அது சூடானதும் வெங்காயம், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், முந்திரி, தேங்காய், பூண்டு, இஞ்சி, கிராம்பு, பட்டை ஆகியவற்றை வதக்கி ஆறவிடவும்.

நன்கு ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போடவும். சூடாக போட்டு அரைத்தால் அந்த புகை மிக்சி ஜாரின் மூடியை பெயர்த்துக்கொண்டு, உங்கள் மீதும், வீடு முழக்கவும் தெரிவித்து விடலாம். எனவே கவனம்!

வணக்கியதும் சூடாக ஃபேன் முன்னாடி வைத்து ஆற வைக்கிறேன் என்ற பெயரில் சிலர் செய்வார்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்கள் தொட்டு விடக் கூடும். எனவே அடுப்பங்கரையிலேயே மேற்புறமாக எங்கேயும் வைப்பது நல்லது.

மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் போட்டு, கொஞ்சம் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது அளவு தண்ணீர் தெளித்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

மேற்குறிப்பிட்ட காய்கறிகளை பாதி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறி இல்லாமலும் ஒயிட் குருமா செய்யலாம்.

மீண்டும் அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து சிம்மில் தீயை வைத்துக் கொள்ளவும். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, கல்பாசி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போன பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.

பின்பு அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும். இதை அடுத்து தக்காளி கருவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

அதன் பின் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். (தேவைப்பட்டால்)

ஏற்கனவே அரைத்து வைத்த விழுதோடு சற்று தண்ணீரையும் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பச்சை வாசனை போன பின்பு நன்கு கொதி வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறலாம்

மிக சுவையான கையேந்தி பவன் ஸ்டைல் ஒயிட் குருமா தயார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE