உயரம் கண்டு தயங்கிய நோயாளிகள் தற்போது மதிக்கின்றனர் – 3 அடி மருத்துவர்
3 அடி மட்டுமே உயரம் உள்ள ஒரு டாக்டர் பலகட்ட போராட்டங்களை கடந்து தற்போது வெற்றி பயணத்தில் ஜொலித்து வருகிறார்.
குஜராத் மாநிலம் காந்திநகரை சேர்ந்த கணேஷ் பாரய்யாவுக்கு 3 அடி தான் ஒட்டுமொத்த உயரமும். ஆனால் அவருக்கு வயது 23 ஆகிறது. லோகோமோட்டிவ் குறைபாட்டால் அவர் குள்ளத்தன்மையுடன் பிறந்து அவ்வாறே வளர்ந்தார்.
பள்ளிகளில் சக மாணவர்கள் கேலி செய்து இவரை துரத்தியபோதும் அத்தனை ஏளனங்களையும் பொறுத்துக் கொண்டு தற்போது மருத்துவராகி சாதனை புரிந்திருக்கிறார் கணேஷ்.
உயரம் சிறிதாயினும் இவரது கனவு மிகப் பெரியது. அதாவது தான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்பது தான் இவரது கனவு. இதனை நினைவாக்க நீட் தேர்வு எழுதி அதிலும் வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்தார்.
ஆனால் 3 அடி மட்டுமே இருப்பதால் இவரால் அவசரகால சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது என காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க இடம் மறுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்து போன அவர் அப்போதைய முதல்வரிடம் இதுகுறித்து முறையிட அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு அறிவுறுத்தினார்.
ஆனால் 2 ஆண்டுகளாக வழக்கு நிலவுகளில் இருந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பில் சேர்ந்தார்.
2019-ல் மருத்துவ படிப்பு முடித்து பயிற்சி பெற்ற அவர் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
முதலில் இவரை கண்ட நோயாளிகள் இவர் ஒரு மருத்துவரா? என்பது போல் பல கேள்விகளை கேட்டு குழப்பம் அடைந்தனர். பின், இவர் அளிக்கும் சிகிச்சையை பார்த்துவிட்டு அந்த மருத்துவப் பதவிக்கே உரித்தான மரியாதையும் கொடுத்து வருவதாகவும் கணேஷ் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.