சீனிப்புளியங்கா, நெல்லிக்காயெல்லாம் ஏன் யாரும் வாங்குதே இல்லயா? இதைப்படிங்க இனி வாங்குவிங்க. .

யாருக்காச்சும் உடம்பு சரியில்லைன்னா, எப்போ பாரு, ஆப்பிள் ஆரஞ்சுதான் வாங்கிட்டுப் போகணுமா? அதைவிட்டுட்டு நம்மூருக் காய், பழம் எல்லாம் ஏன் வாங்குறது இல்ல?

அப்படி நாம மறந்துபோன நம்மூரு காய்கறி, பழங்கள்ல ஏதும் சத்து இல்லையா? அப்படி நெனச்சா நம்மளவிட மஞ்சமாக்கான் வேற யாரும் இருக்க முடியாது.

சீனிப்புளியங்காய கொடிக்காய்ப் புளி என தமிழில் சொல்வார்கள்.
தென் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா என வெப்ப மண்டலப் பிரதேசத்தில் மட்டுமே வளரக் கூடியது.
இது, கொத்துக் கொத்தாகக் காய்த்துக் காய்க்கும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.

கொடிக்காய்புளியில் உள்ள சத்துக்கள்

கார்போஹைட்ரேட்ஸ்
புரோட்டீன்
கரையக்கூடிய நார்ச்சத்து
கால்சியம்
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
சபோனின் என்ற ஃபைட்டோ கெமிகல்
ஃபிளவனாய்ட்
ஃபினால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
வைட்டமின்கள் A மற்றும் C

இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆனது கொடிக்காய்புளி சாப்பிடுவோரின் பார்வைத் திறனை மேம்படுத்தும்

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து சரும வறட்சியைத் தடுக்கும்.
ஆன்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும்
மன அழுத்தம், உடல் உறுப்பு வீக்கம் நாள்பட்ட வியாதிகளைக் குறைக்கும்.

நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கும்
பசியுணர்வைக் குறைக்கும் இதை சாப்பிட்ட பின், தேவையற்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடும் நிலை வராது
எனவே, உடல் எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவைக் குறைத்து எடை அதிகரிப்பைத் தடுக்கும்.

சீனிப்புளியங்காயில் என்னதான் இனிப்பு இருந்தாலும், இதில், ஹைப்போ க்ளைஸெமிக் குணம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
குடலில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சையை அழித்துவிடும்
அல்சர் என்ற வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைத் தடுக்கும்.

இரத்த ஓட்டம் சீராகவும், இரத்தக் குழாய்களில் உண்டாகும் இரத்த உறைவைத் தடுக்கவும் உதவும்.

இதற்கு ஜங்கிள் ஜிலேபி என்ற பெயரும் உள்ளது. அது சரி, நீங்க இந்த ஜங்கிள் ஜிலேபியை வாங்கக் கிளம்பிட்டீங்களா?

நல்ல உணவுகளை அடுத்த தலைமுறைக்கு பழக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE